காந்திய மக்கள் இயக்கம் ஈரோடு மாவட்ட தலைவர் 12 வயது சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் சனிக்கிழமை தெரிவித்தனர். மேலும், அவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்துள்ளது.
காந்திய மக்கள் இயக்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் பெரியசாமி (47). அவர் சில வாரங்களுக்கு முன்பு 12 வயது சிறுமியை தனது புகைப்பட நகல் எடுக்கும் கடைக்கு அழைத்துச் சென்று, அந்த சிறுமிக்கு மடிக் கணினியில் ஆபாசப் படங்களைக் காட்டி சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
அவறின் தவறான நடத்தையால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பித்து ஓடிச் சென்று இது குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அவரது பெற்றோர் சைல்ட்லைனில் புகார் அளித்தனர்.
சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாக பெரியசாமி மீது காவல்வதுறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டதால் அவர் தலைமறைவானார். சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட காந்திய மக்கள் இயக்கம் தலைவர் பெரியசாமி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு போலீசார் அவரைத் தேடிவந்தனர்.
சில நாட்களுக்குப் பிறகு, பெரியசாமி காவல்துறை முன் சரணடைந்ததையடுத்து அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே, காவல்துறையினர் சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பெரியசாமி மீது குண்டாஸ் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஒரு அறிக்கை சமர்ப்பித்தனர்.
விசாரணைகுப் பிறகும், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன், காந்திய மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் பெரியசாமியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதையடுத்து, அவர் குண்டர் சட்டத்தில் ஒரு ஆண்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இதையடுத்து, 12 வயது சிறுமியிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெரியசாமியை போக்சோ சட்டத்தின் கீழும் குண்டர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil