CD Mani Gangster arrested from hideout in Chennai News Tamil : சென்னை மாநகர காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தலைமறைவாகி சுற்றித் திரிந்த பிரபல ரவுடி சிடி மணி நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 5 கொலைகள் உள்பட, 35-க்கும் அதிகமான வழக்குகளில் தொடர்புடைய சிடி மணியை, தற்போது காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். சிடி மணியின் நண்பரான காக்காத்தோப்பு பாலிஜியை கடந்த 2020-ல் மார்ச் மாதத்தில் காவல்துறையில் மடக்கிப் பிடித்து கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை தேனாம்பெட்டையில் உள்ள தாமஸ் சாலையை பூர்வீகமாக கொண்டவர் மணிகண்டன். சாலையோரத்தில் சிடி விற்று பிழைப்பு நடத்தி வந்த நிலையில், சிடி மணி என அழைக்கப்பட்டார். சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, திருட்டு சிடி விற்பனையில் கொடிகட்டி பறந்த சிடி மணி, நாள்கள் செல்ல செல்ல செயின் பறிப்பு, கொலை என குற்ற பின்னனி உடையவராக மாறினார். சென்னையின் தவிர்க்க முடியாத ரவுடிகளில் ஒருவராக சிடி மணி உருவெடுத்த நிலையில், திண்டுக்கல் தாதா பாண்டியனின் நட்பு கிடைக்க, சிடி மணியின் குற்றச் செயல்கள் அத்துமீறி சென்றன. 2009-ல் தமிழக காவல்துறை ரவுடி திண்டுக்கல் பாண்டியனை எண்கவுண்டர் செய்ய, பாண்டியனின் இடத்திற்கு கடும் போட்டி நிலவியது.
முட்டி மோதி, திண்டுக்கல் பாண்டியனின் இடத்திற்கு வந்த சிடி மணிக்கு, ஆதரவும் எதிர்ப்பும் பெருகியது. தனது உடனிருந்த நண்பர்களே எதிரிகளாக மாற, பாண்டியனுக்கு ஆபத்து தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இருந்து வந்தது. இதற்கிடையில் ஆள் கடத்தல், துப்பாக்கி முனையில் மிரட்டி பணம் பறித்தல், கொலை முயற்சி, கொலை என அடுத்தடுத்து சி.டி மணி மீது வழக்குகள் பாய்ந்தன. அவர் மீது 8 கொலை வழக்குகள் உள்பட 28 வழக்குகள் உள்ளன.
சைதாப்பேட்டையைச் சேர்ந்த ஒரு ரவுடியும் வேளச்சேரியைச் சேர்ந்த ரவுடிக் கும்பலும் சி.டி மணியை கொல்ல நீண்ட காலமாக சதித்திட்டம் தீட்டிவந்தனர். அவர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக எப்போதும் துப்பாக்கியோடு மணி வலம் வந்தார். அவரின் பாதுகாப்புக்காக எந்நேரமும் ஒரு கூட்டம் இருக்கும். ரவுடி பினுவின் கைதுக்குப் பிறகு தலைமறைவாக இருக்கும் ரவுடிகளைப் பிடிக்க காவல்துறை கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டாது. ஆனால், ரவுடி சி.டி மணி ஒவ்வொரு முறையும் போலீஸ் வலையில் இருந்து தப்பி வந்தார்.
சி.டி மணி மீது கடந்த 2007ல் தேனாம்பேட்டையில் வெங்கடா கொலை வழக்கு, கோயம்பேட்டில் வாழைத் தோப்பு சதீஷ் கொலை வழக்கு, கே.கே.நகரில் சங்கர், திவாகரன் என இரட்டைக் கொலை வழக்கு ஆகியவை முக்கியமானவை. நடுமண்டையில் வெட்டிக் கொலை செய்வதே சி.டி மணியின் ஸ்கெட்ச் ஸ்டைல். சிடி மணி, காதலித்து திருமணம் செய்தவர். அமைதியாகவே பேசுவார். ஸ்கெட்ச் போடுவதில் கில்லாடி. சிடி மணிக்கு தமிழக காவல்துறையிலேயே நம்பிக்கையான பலர் இருப்பதால், ஒவ்வொரு முறையும் காவல்துறை ஆபரேஷன்களில் இருந்து தப்பித்து வந்தார்.
இந்த நிலையில், தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே கடந்த ஆண்டு மார்ச் 3-ம் தேதி மாலை 4 மணி அளவில் நாட்டு வெடிகுண்டு வீசி சி.டி.மணியை கொல்ல முயற்சி நடத்தப்பட்டன. அதில் அதிர்ஷ்டவசமாக அவன் உயிர் தப்பினார். இந்த நிலையில், சென்னையில் தனிப்படை போலீசார் சிடி மணியை கைது செய்துள்ளனர். சிடி மணியிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil