கோவையில் ஊடு பயிராக கஞ்சா செடி பயிரிட்ட 4 பேர் கைது
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ஊடு பயிராக கஞ்சா செடி பயிரிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 15 கிலோ எடை கொண்ட கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் ஊடு பயிராக கஞ்சா செடி பயிரிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 15 கிலோ எடை கொண்ட கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசுமணி என்ற கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அக்கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் அங்குள்ள நிலத்தில் காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் அக்கிராம நிலத்தில் கஞ்சா செடிகள் பயிரிட்டுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், காவல் ஆய்வாளர் தாமோதரன் மற்றும் உதவி ஆய்வாளர் சிலம்பரசன் ஆகியோர் அங்கு சென்று சோதனை செய்தனர்.
Advertisment
அப்போது பயிர்களுக்கு இடையே ஊடுபயிராக கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரிய வந்தது. மேலும் இது தொடர்பாக விசாரணை செய்தபோது கஞ்சா செடிகளை பயிரிட்டது பசுமணி கிராமத்தில் வசிக்கும் செல்லன்(60), பழனிச்சாமி (60), ராஜப்பன் (33) மற்றும் வேலுச்சாமி (26) என்பது தெரியவந்தது. 4 பேரையும் கைது செய்த போலீசார் அங்கு பயிரிடப்பட்டிருந்த 15.3 கிலோ எடை கொண்ட சுமார் 300 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.
Advertisment
Advertisements
இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், சம்பவ இடத்திற்கு விரைந்து கஞ்சா செடிகளை பார்வையிட்டு, அக்கிராமத்தில் உள்ள பழங்குடி மக்களுக்கு போதைப்பொருளான கஞ்சா பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சட்டத்திற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news