சென்னையில் 10.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், 2 கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேரை தேனாம்பேட்டை போலீஸார் கைது செய்தனர்.
கஸ்தூரி ரங்கன் சாலையில் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது முகமது ஹுசைன் (21), ஜெயந்திரர் ராஜு (21) ஆகிய இரண்டு கல்லூரி மாணவர்களிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது.
அதை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தோம். மேலும் அவர்களிடம் விசாரித்ததில் கொடுங்கையூரைச் சேர்ந்த ஹரி என்பவர் இவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
அவரை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டோம். அதன்படி, மேலும் 100 கிராம் கஞ்சா தேவை என பிடிபட்ட மாணவர்களிடமே ஹரியிடம் கேட்க கோரினோம். கஞ்சாவை திருவல்லிக்கேணியில் கொடுக்க வந்தபோது கைது செய்தோம். அவரிடம் விசாரித்ததில் மேலும் 10.5 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
Gold rate today: தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து கஞ்சாவை ஹரி வாங்கி வந்து போன் மூலமாக ஆர்டர் செய்பவர்களிடம் விநியோகித்து வந்தது தெரியவந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“