Advertisment

பூண்டு விலை வரலாறு காணாத அளவில் உயர்வு; கோவையில் ஒரு கிலோ ரூ.540-க்கு விற்பனை

வரத்து குறைவு எதிரொலி; கிடுகிடுவென உயர்ந்த பூண்டு விலை; கோவையில் கிலோ ரூ.540க்கு விற்பனை; இல்லத்தரசிகள் அதிர்ச்சி

author-image
WebDesk
New Update
Garlic price hike

வரத்து குறைவு எதிரொலி; கிடுகிடுவென உயர்ந்த பூண்டு விலை; கோவையில் கிலோ ரூ.540க்கு விற்பனை; இல்லத்தரசிகள் அதிர்ச்சி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வரத்து குறைவு எதிரொலியாக கோவையில் ஒரு கிலோ பூண்டு ரூபாய் 540க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisment

தமிழகத்தில் நீலகிரி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பூண்டு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இது தவிர மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, குஜராத்தில் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் கோவைக்கு அதிக அளவில் பூண்டு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக பூண்டு விலை குறைவாக இருந்தது அதிகபட்சமாக ஒரு கிலோ ரூபாய் 274 வரை விற்பனையானது.

இந்த நிலையில் பூண்டு வரத்து மிகவும் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் மொத்த மார்க்கெட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் 100 டன்னுக்கு மேல் பூண்டு வந்தது. அது தற்போது 40 டன் ஆக குறைந்துவிட்டது.

இதன் காரணமாக பூண்டு விலை மளமளவென உயர்ந்தது. மொத்த மார்க்கெட்டில் கிலோ ரூபாய் 450 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோவை ஆர்.எஸ் புரம் உழவர் சந்தையில் நேற்று கிலோ ரூ.375 வரை விற்பனையானது. இதனால் மளிகை கடையில் சில்லறை விற்பனையாக கிலோ ரூ.540க்கு விற்பனையானது பூண்டு விலை திடீரென்று உயர்ந்துள்ளதால் இல்லத்தரிசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவைக்கு நீலகிரி மற்றும் வடமாநிலங்களில் இருந்து பூண்டு கொண்டு வரப்படுகிறது. அதன் வரத்து கடந்த ஒரு வாரமாக மிகவும் குறைந்துவிட்டது. இதற்கு மழை மற்றும் விளைச்சல் குறைவு காரணமாக கூறப்படுகிறது, முப்பது கிலோ கொண்ட மூட்டையாக வரும் பூண்டை சிறு வியாபாரிகள் வாங்கிச் சென்று பிரித்து காய வைக்கும் போது மூட்டைக்கு 4 கிலோ வரை கழிவு சென்றுவிடும் இதனால் அவர்கள் கடையில் விற்கும் போது ரூ.540க்கு விற்பனை செய்கிறார்கள்.

கோவை மாவட்டத்தில் உள்ள மளிகை கடைகளில் 100 கிராம் பூண்டு ரூ.55 வரை விற்பனையாகிறது. புதுப்பூண்டு இன்னும் வரவில்லை, இது வந்தால் தான் விலை குறைய வாய்ப்பு உள்ளது. பூண்டு விலை உயர்வால் கடைகளில் பாக்கெட் ஐந்து ரூபாய்க்கு விற்கப்படும் இஞ்சி பூண்டு பேஸ்ட் விற்பனை அதிகரித்து உள்ளது என வியாபாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ரஹ்மான், கோவை

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Garlic kovai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment