காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் லிங்கப்பன் ஒத்தவாடை தெருவில் ஜூலை 13 காலை ஏற்பட்ட தீ விபத்தில், தாய் மற்றும் அவரது 7 வயது மகள் தீக்காயம் அடைந்தனர். நெசவு தொழில் செய்து வரும் மோனசுந்தரத்தின் மனைவி மணிமேகலை, மகள் கிருபாஷினிக்கு குளிக்க வெந்நீர் காய்ச்சும் முயற்சியில் சமையலறையில் கேஸ் அடுப்பை பயன்படுத்தினார். தண்ணீர் வெந்து காய்ந்த பிறகு, குழந்தையை அழைத்துக்கொண்டு குளியல் அறைக்கு மணிமேகலை சென்ற நிலையில், அடுத்த சில நிமிடங்களில் வீடு முழுவதும் தீ பரவியதை உணரவில்லை. கேஸ் அடுப்பில் ஏற்பட்ட கசிவினால் திடீரென தீப்பற்றியது.
குளியல் அறையில் இருந்த தாயும் மகளும் வெளியே வர முடியாமல் உள்ளே சிக்கினர். அவர்களின் அலறல்கள் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மீட்டனர். இதில், மணிமேகலை மற்றும் அவரது மகளும் பலத்த தீக்காயம் அடைந்தனர். இருவரையும் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு. இருவரும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற பிறகு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மணிமேகலை மற்றும் அவரது மகள் கிருபாஷினி இருவரும் நேற்று பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.