scorecardresearch

மேடையில் ஆளுநர்.. ஏ.சியில் இருந்து திடீரென வெளியேறிய புகை; கோவையில் பரபரப்பு

கோவையில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏ.சி மிஷினில் இருந்து திடீரென கேஸ் வெளியேறியதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

Tamil news
Governor RN Ravi

கோவை சரவணம்பட்டி பகுதியில் கே.ஜி அறக்கட்டளை சார்பில் டைனமிக் இந்தியன் ஆஃப் தி மில்லெனியம் விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 5) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசினார். நிகழ்ச்சி மேடைக்கு ஆளுநர் வருகை புரிந்தவுடன், தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

இந்தநிலையில், தமிழ்தாய் வாழ்த்து பாடிக் கொண்டிருக்கும் போது அரங்கில் மாணவர்கள் அமர்ந்திருந்த பகுதியில் இருந்த ஏ.சி மிஷினில் இருந்து திடீரென சப்தத்துடன் கேஸ் வெளியேறியது. இதனால் அங்கிருந்த மாணவர்கள் பதற்றத்திற்குள்ளான நிலையில் உடனடியாக ஏ.சி நிறுத்தப்பட்டது.

அங்கு அமர்ந்திருந்த மாணவர்கள் வேறு இடத்தில் அமர வைக்கப்பட்டனர். இதன்பின்னர் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்றது. இச்சம்பவத்தால் அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Gas leak from faulty ac where gov ravi participates in the ceremony