/indian-express-tamil/media/media_files/2025/10/10/gas-tanker-lorry-strike-2025-10-10-09-14-12.jpg)
TN Gas tanker lorry strike (Image: Google)
பணி அனுமதி ஆணை (work permit orders) வழங்கக் கோரி, தென் மண்டல மொத்த எல்பிஜி டேங்கர் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம், வியாழக்கிழமை (அக்டோபர் 9, 2025) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளதால், தமிழகம் முழுவதும் வீடுகளுக்கான சமையல் காஸ் சிலிண்டர் (LPG) விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தென் மண்டலத்தின் டேங்கர்கள் வேலைநிறுத்தம்:
நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தச் சங்கத்தில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய ஆறு மாநிலங்களைச் சேர்ந்த டேங்கர் லாரிகள் அங்கம் வகிக்கின்றன. இந்த லாரிகள் தான் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து எல்பிஜி எரிவாயுவை நிரப்பும் அலகுகளுக்கு (bottling units) கொண்டு செல்கின்றன. இந்​நிலை​யில், இந்த ஆண்​டுக்​கான வாடகை ஒப்​பந்​தத்​தில் 700-க்​கும் அதி​க​மான காஸ் லாரி​களுக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​க​வில்​லை. சங்கம் வேலைநிறுத்தத்தில் இறங்கியதைத் தொடர்ந்து, சுமார் 5,500 டேங்கர் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
உரிமையாளர்கள் கோரிக்கை:
தென் மண்டல மொத்த எல்பிஜி டேங்கர் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே. சுந்தர்ராஜன் கூறியதாவது:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட ஒப்பந்த விதிகளின்படி, இரண்டு அச்சு கொண்ட லாரிகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு, மூன்று அச்சு கொண்ட லாரிகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
"இதன் காரணமாக, 3,500 எரிவாயு டேங்கர்களுக்கு வேலை அனுமதி ஆணை வழங்கப்பட வேண்டிய நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் 2,800 லாரிகளுக்கு மட்டுமே ஆணை வழங்கியுள்ளன. மீதமுள்ள 700 லாரிகளின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட தகுதியான அனைத்து டேங்கர் லாரிகளுக்கும் பணி உத்தரவு வழங்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்.
ஆரம்பக்கட்டமாக, சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து நிரப்பும் ஆலைகளுக்கு எல்பிஜி கொண்டு செல்வது நிறுத்தப்பட்டுள்ளது. எங்களின் அடுத்தகட்டப் போராட்டத்தில், நிரப்பப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை விநியோக மையங்களுக்குக் கொண்டு செல்வதும் நிறுத்தப்படும்" என்று அவர் நாமக்கலில் நடைபெற்ற அவசர கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் கூட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா கூறுகையில், ”700-க்கும் மேற்பட்ட லாரிகளுக்கு ஒப்பந்தம் வழங்காததால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைவாய்ப்பு இழந்து, வாகன கடனைக் கட்ட முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசின் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தகுதியான அனைத்து காஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். அதுவரை தென்னிந்தியா முழுவதும் உள்ள 5,000 காஸ் டேங்கர் லாரிகள் இயங்காது”, என்றார்.
ரூ. 6,000 கோடிக்கு மேல் லாபம் ஈட்டும் எண்ணெய் நிறுவனங்கள், தென் மண்டல அளவில் டேங்கர் லாரிகள் அனைத்தும் வேலைநிறுத்தத்தை விலக்கிக் கொள்ளும் வரை, அனைத்து டேங்கர்களுக்கும் பணி அனுமதி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சங்க உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.