/tamil-ie/media/media_files/uploads/2023/01/Annamalai-and-Gayathri-Rahuram.jpg)
Annamalai and Gayathri Rahuram
நான் தமிழ்நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன், ஈரோடு இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட தயாரா என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார்.
சமீபத்தில் பா.ஜ.க.,விலிருந்து விலகிய காயத்ரி ரகுராம் தமிழகம் முழுவதும் பா.ஜ.க.,வுக்கு எதிராக நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதையும் படியுங்கள்: பச்சை சட்டை… வேட்டி… கெத்தாக குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடிய விஜயகாந்த்
இந்தநிலையில், ஈரோடு இடைத்தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிடத் தயாரா என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு சவால் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா? நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடு ஆ என்று பார்ப்போம். என்று பதிவிட்டுள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும். சவாலை ஏற்றுக்கொள்வீர்களா?
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) January 15, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.