Advertisment

பா.ஜ.க-வில் இருந்து விலகல்... இ.பி.எஸ் முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்த காயத்ரி ரகுராம்!

நடிகையும், முன்னாள் பா.ஜ.க பிரமுகருமான காயத்திரி ரகுராம் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார்.

author-image
WebDesk
New Update
Gayathri Raghuram met EPS and joined AIADMK Tamil News

பா.ஜ.க-வில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் அ.தி.மு.க-வில் இணைந்தார்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Gayathri Raghuram | AIADMK: தமிழக பா.ஜ.க-வில் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவராக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம். இவர் பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை விமர்சித்தார். இதனால், அவருக்கு பா.ஜ.க மாநில தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக நடிகை காயத்ரி ரகுராம் கடந்த 2022 நவம்பர் மாதம் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்பட்டார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து பா.ஜ.க-வில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதிரடியாக அறிவித்தார். இந்நிலையில், பா.ஜ.க-வில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் இன்று அ.தி.மு.க-வில் இணைந்தார். அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் காயத்ரி ரகுராம் அ.தி.மு.க-வில் இணைந்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Aiadmk Gayathri Raghuram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment