தமிழ்நாடு பாஜகவில் செயல்பட்டுவந்தவர் காயத்திரி ரகுராம். இவருக்கும் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் சில கருத்துகளை தெரிவித்து வந்தார்.
இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது காயத்திரி ரகுராம் சக்தி யாத்திரை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் விசிக தலைவர் தொல். திருமாவளவனை செவ்வாய்க்கிழமை (பிப்.21) அம்பேத்கர் திடலில் சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகின.
இந்த நிலையில் தொல். திருமாவளவன் ட்விட்டரில், “அம்பேத்கர் திடலுக்கு வந்த @Gayatri_Raguram அவர்களுக்கு ‘உலக வரலாற்றில் பெண்கள்’ எனும் நூலைப் பரிசாக அளித்தேன்.
அன்னை சாவித்திரிபாய் ஃபுலே அவர்களின் சகிப்புத் தன்மையும் ஜெயலலிதா அம்மையாரின் போர்க் குணமும் பொதுவாழ்வில் ஒவ்வொரு பெண்மணிக்கும் தேவை என்பதைச் சொல்லி அவரை வாழ்த்தினேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், காயத்திரி ரகுராமின் சக்தி யாத்திரை வெற்றி பெற வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பாஜகவில் இருந்தபோது, காயத்திரி ரகுராம் திருமாவளவனை தொடர்ச்சியாக விமர்சித்து வந்தார்.
இதனை நினைவுக் கூர்ந்துள்ள வி.சி.க தொண்டர்கள், “எதிர்ப்பாளர்களும் பூங்கொத்து கொடுக்கும் காலம் வரும் எனத் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/