scorecardresearch

‘அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’: பா.ஜ.க-வில் இருந்து காயத்ரி ரகுராம் விலகல்

“ நான் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்று ட்வீட் செய்துள்ளார்.

‘அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை’: பா.ஜ.க-வில் இருந்து காயத்ரி ரகுராம் விலகல்

தமிழக பாஜக-வில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் தனது டவிட்டர் பகத்தில் தெரிவித்துள்ளார்.

பாஜகவின்  சிறுபான்மை அணியின் தலைவரான டெய்சியை,   அதே கட்சியை சேர்ந்த திருச்சி  சூர்யா, தவறாக வார்த்தைகளால் பேசினார். அவர்கள் பேசிய ஆடியோ சமூகவளைதங்களில் வெளியானது. இந்த ஆடியோ தொடர்பாக அண்ணாமலை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காயத்ரி ரகுராம் பல்வேறு ட்வீட்களை பதிவு செய்தார். மேலும் அவர் உள்கட்சி விவகாரங்களை பொதுவில் பேசுவதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் “ கட்சி கட்டுபாட்டை மீறியதால், 6 மாத காலம் காயத்ரி ரகுராம் நீக்கப்படுவதாக” அறிவித்தார். இந்நிலையில் சமூகவலைதளத்தில் காயத்ரி கொடுத்த நேர்கணலில் “ தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சரியாக வேலை செய்யவில்லை என்று கூறுகிறார். இது வேதனை அளிக்கிறது. நான் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தனிமைப்படுத்தபடுவதாக உணர்கிறேன் “ என்று அவர் கூறினார்.

இந்நிலையில் அவர் தமிழக பாஜக-வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவு செய்த ட்வீட்டில்  “ நான் கட்சியிலிருந்து விலக முடிவு செய்துள்ளேன். அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்று ட்வீட் செய்துள்ளார்.   

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Gayathri raghuram resign from tamilnadu bjp tweet