scorecardresearch

பா.ஜ.க-வுக்கு எதிராக நடை பயணம்; உயிர் போனாலும் நடத்திக் காட்டுவேன்: காயத்ரி ரகுராம்

பா.ஜ.க.வுக்கு எதிராக நடத்தப்படும் இந்த நடைப்பயணத்தை என் உயிர் போனாலும் நடத்திக்காட்டுவேன் என்றும் நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க-வுக்கு எதிராக நடை பயணம்; உயிர் போனாலும் நடத்திக் காட்டுவேன்: காயத்ரி ரகுராம்

பெண்களை அவமானப்படுத்தியதற்கும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காததற்கும், முன்னாள் பாரத ஜனதா கட்சியின் உறுப்பினரான காயத்ரி ரகுராம் ஜனவரி 27ஆம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இதைப்பற்றி டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ள அவர், “பா.ஜ.க பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27-ம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைப்பயணம் மேற்கொள்வேன்.

தனியாக இருந்தாலோ அல்லது யார் வேண்டுமானாலும் என்னுடன் சேரலாம். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படவில்லை.

என் உயிர் போனாலும் செய்வேன். நான் நீதிக்காக போராடுவேன். நான் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். இது அரசியலில் பொது சேவை மற்றும் பொது வாழ்க்கை பெண்களுக்கானது.

இந்த நடைப்பயணம் அரசியலில் உள்ள அனைத்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட சாதாரண பொது பெண்களுக்கும், பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பாதிக்கப்பட்ட காவல்துறை பெண்களுக்கும் ஆகும்”, என்று பதிவிட்டுள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Gayathri raguram protest against tn bjp on january 27th 2023