சென்னையில் கழிவுநீர் கால்வாய்களில் சுற்றித் திரியும் மாடுகளின் பாலை பயன்படுத்த வேண்டாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை பரபரப்பான மாநகரமாக இருந்தாலும் சென்னைக்கு உள்ளேயும், அதன்புறநகர் பகுதிகளிலும் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. அப்படி வளர்க்கப்படும் கால்நடைகள் மேய்ச்சலுக்காக கழிவு நீர் கால்வாய் ஓரங்களில் விடப்படுகின்றன. அந்த கால்நடைகள் கழிவுநீர் கால்வாய்களில் இறங்கி மேய்வது உண்டு.
இந்நிலையில், கழிவுநீர் கால்வாயில் சுற்றித் திரியும் மாடுகளில் இருந்து பெறக்கூடிய பாலை பயன்படுத்த வேண்டாம் என்றும், அதன் மூலம் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோவை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”