கலைஞரை பற்றி அவதூறாக பேசிய சீமானுக்கு அமைச்சர் கீதான் ஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், “ ஒரு கட்சி தலைவர் என்பதற்கான பண்பே இல்லாமல் சீமான் பேசுகிறார். சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் சீமான் பேச்சு உள்ளது. 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரை அவதூறு பேசி வருகின்றனர். அந்த அவதூறு கருத்துக்களை கண்டு சீமான் சிரித்துக்கொண்டு இருக்கிறார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மறைவின் போது இளைய சமூகத்தினருக்கு கருணாநிதி ஒரு படிப்பினை என்று கூறினார். இப்போது இப்படி மாற்றி பேசுகிறார். சாட்டை துரைமுருகன் பேச்சை சீமான் கண்டிக்காதது ஏன்? கலைஞர் அனைத்து தரப்பு மக்களுக்குக்கான திட்டங்களை தீட்டியவர் குறிப்பிட்ட சாதியைச் சொல்லி பாட்டு பாடி அந்த சமூகத்தை மீண்டும் அவமதித்துள்ளார் சீமான். தம்பி படத்தில் உபயோகிக்கப்பட்ட எந்த வார்த்தைக்காக மனிப்பு கேட்டாரோ அதே வார்த்தையை மீண்டும் இன்று அவரே பேசி உள்ளார். வாய்க்கு வந்ததை பேசிவிட்டு செல்கிறார். அவரின் பேச்சுக்கு தி.மு.க சார்பில் கண்டம் தெரிவித்துக்கொள்கிறேன்.
சாதி மதத்தின் பெயரால் சட்டம் ஒழுங்கு சீர்குலைக்க முயற்சிக்கிறார். மதம், சாதியின் பொயரால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கில் சீமான் பேசி வருகிறார். சீமான் தனது மனநிலையை சோதிப்பது நல்லது. தனிப்பட்ட முறையில் உண்மைக்கு புறம்பாக பேசுவது ஏற்கத்தக்கதல்ல. தமிழ்நாடு இந்த அளவுக்கு முன்னேறி உள்ளதற்கு காரணம் கலைஞர்தான் . தமிழ் சமூகத்தை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தவறாக வழிநடத்துக்கிறார். பெண் காவலர்களை சவுக்கு சங்கர் தவறாகப் பேசி வீடியோ வெளியிட்டத்தை சீமான் ஏற்கிறாரா? இலங்கையில் பணம் பெற்றுக்கொண்டு இங்கு வந்து அரசியல் செய்பவர்தான் சீமான். சீமான் நாவடக்கத்துடன் பேச வேண்டும். அரசியல் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். ” என்று அவர் கூறீனார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
தமிழ்நாடு முன்னேறி உள்ளதற்கு காரணம் கலைஞர்தான். சீமான் நாவடக்கத்துடன் பேச வேண்டும்: கீதான் ஜீவன்
கலைஞரை பற்றி அவதூறாக பேசிய சீமானுக்கு அமைச்சர் கீதான் ஜீவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
Follow Us

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.