ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பாதுகாப்புப் படைத் தளபதி பிபின் ராவத், சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்.பில் ஆய்வறிக்கையை மேற்கொண்டதாக சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் இறந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, வெள்ளிகிழமையன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும், வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் பணியாளர்கள் கல்லூரி மற்றும் நேஷன் டிஃபென்ஸ் கல்லூரிகளில் பிபின் ராவத் ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொண்டதாக சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகம் ஒரு அறிக்கையில், பிபின் ராவத் ஆயுதப் படைகளுக்கான சக்தியைப் பெருக்கும் ஊடகம் என்ற தலைப்பில் ஒரு எம்.பில் ஆய்வறிக்கையை மேற்கொண்டார் என்று கூறியுள்ளது.
இதேபோல், பிரிகேடியர் எல்.எஸ். லிடர் கடந்த ஆண்டு (2020) பாதுகாப்பு மற்றும் வியூக ஆய்வுகளில் தனது எம்.பில் படிப்பை முடித்திருந்தார். எஸ்.எஸ்.லிடரின் ஆய்வறிக்கை "சீனாவின் விண்வெளி திறன்கள்: இந்தியாவுக்கான தாக்கங்கள்" என்ற தலைப்பில் இருந்தது. மேலும், குரூப் கேப்டன் வருண் சிங், இந்த நிறுவனத்தில் இருந்து பாதுகாப்பு மற்றும் வியூகப் படிப்பில் எம்எஸ்சி பட்டம் பெற்றவர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil