ஜெர்மன் ஷிப்பிங் நிறுவனமான ஹபாக் லாய்ட் ஏ.ஜி தமிழக அரசுடன் ஸ்பெயினில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் திட்டங்கள் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு முனையங்கள் - சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் முன்னணி நிறுவனமான ஜெர்மன் நாட்டு ஹபாக் லாய்ட் ஏ.ஜி (Hapag-Lloyd AG) நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயினில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்த கையெழுத்தானது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மன் ஷிப்பிங் மற்றும் கண்டெய்னர் போக்குவரத்து நிறுவனமான ஹபாக்-லாயிட் ஏ.ஜி, தூத்துக்குடி மற்றும் பிற பகுதிகளில் பல்வேறு திட்டங்களுக்காக ரூ. 2,500 கோடி முதலீடு செய்ய தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஹபாக்-லாயிட் ஏ.ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெஸ்பர் கன்ஸ்ட்ரூப் மற்றும் இயக்குநர் ஆல்பர்ட் லோரெண்டே ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசின் மூத்த அதிகாரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஸ்பெயினில் மேற்கொள்ளப்பட்டது என்று தமிழக அரசு வியாழக்கிழமை (01.02.2024) வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டபோது தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவும் உடனிருந்தார்.
தமிழகத்தில் ஹபாக்-லாயிட் நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களில் ரூ. 2,500 கோடி முதலீடு செய்யப்படுவதால், சுமார் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 27-ம் தேதி ஸ்பெயினுக்குப் புறப்பட்டார். ஸ்பெயினில் தொழில்துறை அமைப்புகளின் பிரதிநிதிகள், பெரிய நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் மற்றும் முதலீட்டு முகமைகளின் மாநாடு நடந்து வருகிறது.
மற்றொரு நிகழ்வில், அபெர்டிஸ் (Abertis) சர்வதேச மற்றும் நிறுவன உறவுகளின் தலைவர் லாரா பெர்ஜானோ பெரெஸ், மு.க. ஸ்டாலின், டி.ஆர்.பி. ராஜா மற்றும் மூத்த அதிகாரிகளைச் சந்தித்தார். மாட்ரிட்டைத் தலைமையிடமாகக் கொண்ட அபெர்டிஸ் சுங்கச்சாவடி மேலாண்மைப் பகுதியில் இயங்குகிறது.
அபெர்டிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் சாலைகள் மற்றும் அது சார்ந்த உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வெளியீடு தெரிவித்துள்ளது.
#Spain trip's momentum continues!
— M.K.Stalin (@mkstalin) February 1, 2024
Productive meetings with Hapag-Lloyd's MD Mr. Jesper Kanstrup and Director Mr. Albert Lorente resulted in a significant ₹2,500 Cr investment in southern TN. Excited to announce an MoU for cargo terminals and industrial parks, focusing mainly… pic.twitter.com/0njESI7KWR
இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “#ஸ்பெயின் பயணத்தின் வேகம் தொடர்கிறது!
ஹபாக் லாயிட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெஸ்பர் கண்ஸ்ட்ருப் மற்றும் இயக்குநர் ஆல்பர் லொரெண்டே ஆகியோருடனான ஆக்கபூர்வமான சந்திப்புகளின் விளைவாக தென் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க வகையில், ரூ.2,500 கோடி முதலீடு கிடைத்துள்ளது. முக்கியமாக தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் கவனம் செலுத்தி, சரக்கு முனையங்கள் மற்றும் தொழில் பூங்காக்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
#அபெர்டிஸ் (Abertis) சரவதேச மற்றும் நிறுவன உறவுகள் தலைவர் லாரோ பெர்ஜானோவுடன் சாலை உள்கட்டமைப்பு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தமிழ்நாட்டின் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் முதலீடுகளை அதிகரிக்க அவர்களை அழைத்தார்.
தமிழகத்தில் முதலீடுகளின் பயணம் தொடர்கிறது! #InvestInTN #ThriveInTN” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.