scorecardresearch

‘கெட் அவுட், ரவி’: சென்னையில் ஆளுனருக்கு எதிராக தி.மு.க போஸ்டர்கள்

14 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் , அவர் தனது பணிகளில் இருந்து தப்பித்து விட்டார் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

governor rn ravi

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ‘பில் டெட்’ என்ற சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து, அவரை தமிழகத்தில் இருந்து வெளியேறுமாறு, அவருக்கு எதிராக பல சுவரொட்டிகள் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சிவில் சர்வீசஸ் ஆர்வலர்களுடன் வியாழன் அன்று உரையாடியபோது, ​​அரசியலமைப்பில் ஆளுநரின் பங்கை விளக்கி, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவோ அல்லது நிறுத்தி வைக்கவோ தனக்கு உரிமை இருப்பதாக கூறினார்.

இதை தொடர்ந்து, 14 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் , அவர் தனது பணிகளில் இருந்து தப்பித்து விட்டார் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

“கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கொண்டு வரும் மசோதாக்கள், அவசரச் சட்டம், சட்டம் என 14 ஆவணங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் அவரது நிர்வாகப் பொறுப்புகளில் இருந்து தப்பிவிட்டார்” என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், “இது ஆளுநர் கடமை தவறுவதை மட்டுமல்ல, முழு இடையூறையும் காட்டுகிறது. தொடர்ந்து அழுத்தம் கொடுத்தபோது, தனது பொறுப்பு முடிந்துவிட்டதாக நினைத்து மசோதாவைத் திருப்பித் தருகிறார்” என்றும் முதலமைச்சர் கூறினார்.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு, “பாராளுமன்ற ஜனநாயகம் இறந்து விட்டது” என்று கூறி அவரை கடுமையாக விமர்சித்தார்.

சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், “சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு தமிழக அரசு வித்தியாசமான வரையறையை அளித்துள்ளது. அது ‘மசோதா இறந்துவிட்டது’ என்று ஆளுநர் கூறியுள்ளார். உண்மையில், ஒரு ஆளுநர் நிறுத்தும்போது சரியான காரணமின்றி ஒப்புதல் வழங்கினால், ‘பாராளுமன்ற ஜனநாயகம் இறந்து விட்டது’ என்பதே அர்த்தம்”, என்று பதிவிட்டார்.

சிவில் சர்வீசஸ் ஆர்வலர்களுடன் உரையாடிய ரவி, அரசியலமைப்பைப் பாதுகாப்பது ஆளுநரின் பொறுப்பு என்றார். இதைப்பற்றி மேலும் பேசிய அவர், “நமது அரசியலமைப்பு ஆளுநரின் பதவியை உருவாக்கி அவரது பொறுப்புகளை வரையறுத்துள்ளது. ஆளுநரின் முதல் மற்றும் முக்கிய பொறுப்பு இந்திய அரசியலமைப்பைப் பாதுகாப்பதாகும், ஏனெனில் அது யூனியனாக இருந்தாலும் சரி, மாநிலமாக இருந்தாலும் சரி, இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் அதன் படி செயல்பட வேண்டும். அரசியலமைப்பை நீங்கள் எவ்வாறு பாதுகாக்கிறீர்கள்?

ஒரு மாநிலம் அரசியலமைப்பு வரம்பை மீறும் சட்டத்தை உருவாக்குகிறது என்று வைத்துக்கொள்வோம். அரசியலமைப்பு வரம்பை மீறினால், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, கவர்னர் ஒப்புதல் அளிக்கும் வரை, சட்டமாக மாறாது. அதற்கு ஒப்புதல் அளிப்பது அரசியலமைப்புச் சட்டப் பொறுப்பாகும். மசோதா வரம்பை மீறுகிறதா, என்று மாநில அரசு பார்க்க வேண்டும். அதன் தகுதியை மீறுகிறது என்றால், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது ஆளுநரின் பொறுப்பு” என்று ரவி மேலும் கூறினார்.

மேலும், “சட்டசபையால் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதல் பெற அனுப்பப்படும்போது, ​​ஆளுநருக்கு மூன்று வழிகள் உள்ளன என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. அரசியலமைப்பு பெஞ்ச் மூலம் உச்சநீதிமன்றம், மசோதாவை நிறுத்தி வைப்பது என்றால் மசோதா இறந்துவிட்டதாக அர்த்தம். நிராகரிக்கப்பட்டது என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு பதிலாக இது ஒரு கண்ணியமான மொழியாக பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் நிறுத்தி வைத்தால், மசோதா இறந்துவிட்டது என்று அர்த்தம்”, என்று ஆளுநர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Get out ravi posters in chennai calling for governor exit tamil nadu

Best of Express