Advertisment

செஞ்சி மஸ்தானுக்கு கொரோனா: தமிழகத்தில் இதுவரை 6 எம்.எல்.ஏ-க்கள் பாதிப்பு

சட்டமன்ற உறுப்பினர்களில் கொரோனா பாதிப்புக்குள்ளான 6-வது எம்.எல்.ஏ, திமுகவில்  கொரோனா பாதிப்புக்குள்ளான 4-வது எம்.எல்.ஏ. மஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today Live Updates

செஞ்சி மஸ்தானுக்கு கொரோனா. Masthan DMK MLA Tested positive For Coronavirus

DMK MLA Masthan Tested positive For Coronavirus : திமுக செஞ்சி சட்டமன்ற உறுப்பினர், விழுப்புரம் மாவட்டம் திமுக வடக்கு மாவட்டச் செயலர் செஞ்சி  மஸ்தானுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் சென்னை வரவழைக்கப்பட்டு தீவிர பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர்.

Advertisment

எனவே, சட்டமன்ற உறுப்பினர்களில் கொரோனா பாதிப்புக்குள்ளான 6-வது எம்.எல்.ஏ, திமுகவில்  கொரோனா பாதிப்புக்குள்ளான 4-வது எம்.எல்.ஏ. மஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், கொரோனா தொற்று காரணமாக பலியானார்.

ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ. பழனி, ரிஷியந்தம்  திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசு, உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன், திமுக  சார்பில் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ்  உதவி வழங்கும் பணிகளை திண்டிவனம் செஞ்சி பகுதிகளில் கே.எஸ் மஸ்தான்  ஒருங்கிணைத்து நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவில், நேற்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா தொற்று உறு தி செய்யப்பட்டது. மாநிலத்தின் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது. மேலும்,  கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1025 ஆக உயர்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment