scorecardresearch

ராமர் கோவிலுக்கு நன்கொடை: திமுக எம்எல்ஏ விளக்கம்

Gingee KS MASTHAN MLA Ram Temple Donation : எனது செயல்பாட்டில் கடவுள்களுக்கு வருத்தம் இருப்பதாய் நான் நினைக்கவில்லை.

ராமர் கோவிலுக்கு நன்கொடை: திமுக எம்எல்ஏ விளக்கம்

தி.மு.க சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவுச் செயலாளரும், செஞ்சி சட்டமன்றத் தொகுதி  உறுப்பினருமான கே. எஸ் மஸ்தான், அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ. 11, 000    நன்கொடையாக அளித்தார்.

நீண்டகால நண்பர் ஒருவர் (கலிவரதன்) ராமர் கோயிலுக்கு நிதி திரட்டுவது தொடர்பாக என்னை சந்தித்தார். தம்மீது முழுமையான நம்பிக்கை வைத்த காரணத்திற்காக  அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன் ஆவேன். மேலும், கோவிலுக்கு நன்கொடை அளிப்பது என்னுடைய வழக்கம் என்று மஸ்தான் தெரிவித்தார்.

கலிவரதன் விழுப்புரம் தமிழக பாஜக மாவட்டத் தலைவராக பணியாற்றி வருகிறார்.

1986 ஆம் ஆண்டு செஞ்சி நகர பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தில் இருந்து, பல்வேறு கோயில் கட்டுமான பணிக்கு நன்கொடை வழங்கி வருகிறேன். பல்வேறு, கோயில் கும்பாபிஷேகம்  நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளேன். எனது செயல்பாட்டில் கடவுள்களுக்கு வருத்தம் இருப்பதாய் நான் நினைக்கவில்லை. கடவுளின் பெயரைப் பயன்படுத்தி சிலர் பிரச்சனைகளை உருவாக்கி வருகின்றனர்,”என்றும்  அவர் தெரிவித்தார்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திருமக் பொறுப்பாளர் திருத்தனி எம்.பூபதி ராமர் கோயில் கட்டுவதற்காக நன்கொடை அளித்திருப்பது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அயோத்தியில் ராமருக்கு கோயில் எழுப்புவதினால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், பாபர் மசூதியை இடித்துவிட்டுத்தான் ராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்றால் நிச்சயமாக அதை திமுக ஏற்றுக்கொள்ளாது என்ற நிலைப்பாட்டை மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கொண்டிருந்தார்.

மேலும், சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான கேள்விக்கு ராமர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்து பட்டம் பெற்று ராமர் பாலத்தைக் கட்டினார். அதற்கு ஆதாரம் இருக்கிறதா?’’ என்று கேள்வியையும் முன்வைத்தார்.

கடந்த 2019ல், சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி அயோத்யாவில் ராமர் கோயில் கட்டுவதை மேற்பார்வையிடுவதற்கான அறக்கட்டளையும் பிரதமர் மோடி அறிவித்தார்.

இதுதொடர்பாக, ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,  ராமர் கோயில் தொடர்பாக கலைஞர் கருணாநிதி கொள்கையில் இருந்து சற்று பின்வாங்குவதாக அமைந்தது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

முன்னதாக, அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ” ராமரின் பெயர் பொறிக்கப்பட்ட கற்கள் மூலம் ராமர் பாலம் கட்டப்பட்டதைப் போன்று, ஒவ்வொரு வீடுகள் மற்றும் கிராமங்களிலிருந்து தவத்தாலும், பக்தியாலும் கொண்டுவரப்பட்ட கற்கள், இங்கு சக்தியின் ஆதாரமாக மாறியுள்ளன” என்று தெரிவித்தார்.

மன்னாருக்கும் இராமேசுவரத்துக்கு இடைப்பட்ட மணல் திட்டுப் பகுதியில் காணப்படும் மணல் திட்டுக்கள் இராமர் கட்டிய பாலம் என இந்துக்களால் நம்பப்படுகிறது. திட்டத்தில் இத்திட்டுக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தைக்கூறி சில இந்து அமைப்புக்கள் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை எதிர்க்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Gingee ks masthan dmk mla donated rs 11 000 for ram temple in ayodhya