Advertisment

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக மத்திய நீர்வளத்துறைக்கு கடிதம் எழுதிய கிரிஜா வைத்தியநாதன்

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் ஆய்வு செய்யப்பட்டாதாக மத்திய நீர்வளத்துறை மீது குற்றச்சாட்டு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live

Tamil Nadu news today live

கிரிஜா வைத்தியநாதன் கடிதம் : தூத்துக்குடியில் நீர் மாசுபாடு குறித்து மத்திய நீர்வளத்துறை ஆய்வு செய்து அறிக்கை ஒன்று வெளியிட்டது.  அதில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் நச்சுக் கழிவால் மக்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது என்றும், இதன் காரணமாகவே ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை நிரந்தரமாக தமிழக அரசு மூடியது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Advertisment

அறிவியல் பூர்வமாகவே இந்த ஆய்வறிக்கையை ஆராய்ந்து சமர்பிக்கப்பட்டிருக்கிறது என்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கூறியுள்ளாது.

கிரிஜா வைத்தியநாதன் குற்றச்சாட்டு

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடியில் நீர் மாசுபாடு குறித்து அறிவியல் பூர்வமற்ற ஆய்வறிக்கையை மத்திய நீர்வளத்துறை வெளியிட்டிருக்கிறது என்றும், இதனால் மக்கள் மத்தியில் அமைதியற்ற சூழல் உருவாகும் என்றும் கிரிஜா கூறியிருக்கிறார். மேலும் தமிழக அரசுடன் ஆலோசனையில் ஈடுபடாமல் தானகவே வந்து ஸ்டெர்லைட் குறித்து ஆய்வு செய்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க முற்படும் வேதாந்தா

மேலும் நீர்வளத்துறை அமைச்சகத்தின் ஆய்வறிக்கயை திரும்பப் பெற வேண்டும் என கிரிஜா வைத்தியநாதன் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி நடத்திய போராட்டத்தின் தமிழக காவல்துறையினரால் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்து ஆலையை நிரந்தரமாக மூடியது குறிப்பிடத்தக்கது.

Sterlite Copper Industries Girija Vaidyanathan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment