Advertisment

நாமக்கல்லில் சிக்கன் சாப்பிட்ட சிறுமி பலி... 43 பேர் உடல்நிலை பாதிப்பு... உணவக உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

நாமக்கல்லில் தனியார் உணவகத்தில் சிக்கன் சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், 43 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், உணவக உரிமையாளர் உள்பட 3 கைது செய்யப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
girl

நாமக்கல்லில் தனியார் உணவகத்தில் சிக்கன் சாப்பிட்ட 14 வயது சிறுமி; உணவக உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

நாமக்கல்லில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், அந்த உணவகத்தில் சாப்பிட்ட 43 பேர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், உணவக உரிமையாளர் உள்பட 3 கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

நாமக்கல்லில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த உணவகத்தில் சாப்பிட்ட 43 பேர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாமக்கல்லில் இருக்கும் பரமத்தி சாலையில் தனியார் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் கடந்த சனிக்கிழமை இரவு (செப்டம்பர் 16) கலையரசி என்ற 14 வயது சிறுமி குடும்பத்துடன் வந்து ஷவர்மா, தந்தூரி சிக்கன் உள்ளிட்ட உணவு வகைகளை வாங்கிக்கொண்டு சென்று வீட்டில் வைத்து சாப்பிட்டிருக்கிறார்கள். அந்த உணவை சாப்பிட்ட பிறகு, அவர்களுக்கு உடனடியாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, சிறுமியின் தாயார் சுஜாதா, சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார்கள். சிகிச்சை பெற்ற வீட்டு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், வீட்டில் இருந்த சிறுமி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி உயிரிழந்தது அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, சிறுமியின் தாயார் சுஜாதா மற்றும் தம்பி 12 வயது சிறுவன் மற்று உறவினர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

நாமக்கல்லில் தனியார் உணவகத்தில் சிக்கன் சாப்பிட்ட சிறுமி உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் உமா, சிறுமியின் தாயார் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்வையிட்டு நலம் விசாரித்தார்.

இதுமட்டுமல்லாமல், நாமக்கல்லில் ஏற்கெனவே அந்த உணவகத்தில் சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 13 பேர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு செப்டம்பர் 17-ம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதைத் தொடர்ந்து நேற்று (செப்டம்பர் 17) உணவகத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் உமா, உணவகத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். 

இதைத் தொடர்ந்து, இன்று காலை (செப்டம்பர் 18) உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் உறவினரை சந்தித்துப் பேசிய, மாவட்ட ஆட்சியர் உமா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, உணவகத்தில் இருந்து எடுத்து ஆய்வுக்கு அனுப்பப்பட்ட பொருட்கள் எதுவும் பாதிப்பு இல்லாமல்தான் இருந்தது. இருப்பினும், தரமற்ற உணவை சாப்பிட்டதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தனியார் உணவகத்தில் சாப்பிட்ட நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 13 பேர் உள்பட மொத்தம் 43 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். எனவே, அந்த உணவகத்தின் உரிமையாளர் நவீன்குமார், சமையலரான ஒடிசாவைச் சேர்ந்த சஞ்சய் மாத் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் உமா கூறினார். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Namakkal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment