மாணவி பலாத்காரம்; செல்போனில் வீடியோ: பெற்றோருக்கு ஒரு எச்சரிக்கை

சிறுமியின் பெற்றோர் இது குறித்து குருபரப்பள்ளி போலீசில் புகார் அளித்துள்ளனர்

சிறுமியின் பெற்றோர் இது குறித்து குருபரப்பள்ளி போலீசில் புகார் அளித்துள்ளனர்

author-image
WebDesk
New Update
girl raped: Three boys arrested

girl raped: Three boys arrested

பள்ளி மாணவியை சக வகுப்பு மாணவர்கள் தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து செல்போனில் பகிர்ந்த கொடுமை அரங்கேறியுள்ளது.

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி சேர்ந்த ஒரு லாரி டிரைவரின் மகள் அருகில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில் கடந்த மாதம் ஐந்தாம் தேதி நதிக்கரையில் வைத்து அந்த மாணவியை அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் மாணவனும், அவனது நண்பனும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மேலும் இதனை வீடியோவாக எடுத்து அவர்கள் மற்றொரு நண்பனிடம் இதனை காட்டியுள்ளனர். இதனை அந்த சிறுவன் சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார். இதனை கண்ட அந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து குருபரப்பள்ளி போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் அந்த மூன்று சிறுவர்களையும் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.

தன்னுடன் படிக்கும் சகமாணவியை பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோவாக செல்போனில் படம் எடுத்துள்ளனர் பள்ளி மாணவர்கள். இந்த சம்பவம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லை, இதுப்போன்ற குற்றங்களில் மாணவர்கள் ஈடுபடுவதை பெற்றோர்கள் கவனமாக உற்று நோக்க வேண்டும்.

Advertisment
Advertisements

பள்ளி செல்லும் மாணவர்கள், கையில் செல்போன் கொண்டு செல்வதை கூட கவனிக்காமல் அவர்கள் வீட்டில் இருந்துள்ளனர். குற்றச்செயலில் ஈடுப்பட்டுள்ள அந்த மாணவர்களின் பெற்றோர்களை போலீசார் எச்சரித்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: