அன்புமணி மீது 15 குற்றச்சாட்டுகள்; பா.ம.க பொதுக்குழுவில் அறிக்கை வாசித்த ஜி.கே. மணி

பா.ம.க சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, டாக்டர் ராமதாசால் உருவாக்கப்பட்ட கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழு, அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகளை அறிக்கையாக வாசித்தார்.

பா.ம.க சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, டாக்டர் ராமதாசால் உருவாக்கப்பட்ட கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழு, அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகளை அறிக்கையாக வாசித்தார்.

author-image
WebDesk
New Update
GK Mani pmk

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் பா.ம.க-வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பா.ம.க சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, டாக்டர் ராமதாசால் உருவாக்கப்பட்ட கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழு, அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகளை அறிக்கையாக வாசித்தார். 

Advertisment


பா.ம.க-வில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் அவருடைய மகனும் பா.ம.க தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆகஸ்ட் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அடுத்த ஓராண்டுக்கு அன்புமணி பா.ம.க தலைவர் பதவியில் நீடிப்பார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் பா.ம.க-வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், 200-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர், தலைவர் என 4 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

பா.ம.க சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, டாக்டர் ராமதாசால் உருவாக்கப்பட்ட கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழு, அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகளை அறிக்கையாக வாசித்தார். 

Advertisment
Advertisements

“மருத்துவர் ஐயா (டாக்டர் ராமதாஸ்) உருவாக்கிய 8 பேரால் தயாரிக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கை இப்பொழுது உங்கள் முன்னாலே அறிவிப்பு செய்யப்படுகிறது” என்று ஜி.கே. மணி பொதுக்குழுவில் அறிக்கையை வாசித்தார்.

1. “கடந்த 22.12.2024 அன்று 24 க்கு விடை கொடுப்போம், 25 வரவேற்போம் என்ற சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டத்தில் மருத்துவர் அன்புமணி ‘மைக்’  தூக்கிப்போட்டு மருத்துவ அய்யா (டாக்டர் ராமதாஸ்) கருத்துக்கு எதிராக பேசியது, பனையூரில் புதிய கட்சி அலுவலகம் தொடங்கியுள்ளேன், அங்கே வாருங்கள். அதற்குரிய கைப்பேசி எண்ணை குறித்துக் கொள்ளுங்கள் என்று கைபேசி எண் கொடுத்ததும், இது போன்ற செயல்கள் கட்சியை அன்றே பிளவுபடுத்துவதும் குழப்பத்தை ஏற்படுத்துவதும் போன்ற தலைமைக்கு கட்டுப்படாத செயலாகவே இந்த ஒழுங்கு நடவடிக்கை குழு கருதுகிறது.

2. 11.5.2025 அன்று மாமல்லபுரம் இளைஞர் பெருவிழா மாநாடு முடிந்த பின்னர் அடுத்து கட்சி வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளுக்காக 13.5.2025 அன்று தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கும் என்றும் அதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் மருத்துவ ஐயா அறிவித்தார்கள். அதை தொடர்ந்து மருத்துவர் அன்புமணி அவர்கள் இரவு முழுவதும் மாவட்ட செயலாளர்களுக்கு கைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் யாரும் தைலாபுரம் தோட்டத்திற்கு போகாதீர்கள் உங்களிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு மருத்துவர் அன்புமணி ஆகிய என்னை கட்சியிலிருந்து மருத்துவரை அவர்கள் நீக்க போகிறார் என பொய்யான செய்திகளை வதந்திகளை சொல்லி மொத்தம் 108 மாவட்ட செயலாளர்களில் 100 பேரை தடுத்து நிறுத்தியது கட்சியை பிளவு படுத்தி திட்டமிட்டு செய்த தவறான கட்சி விரோத நடவடிக்கையாகவே இந்த ஒழுங்கு நடவடிக்கை கருதுகிறது.

3.பா.க.க-வின் ஒரு அணியான பாட்டாளி சமுக ஊடகப் பேரவையின் ஒரு சிலரை தன் கையில் வைத்துக்கொண்டு மருத்துவர் ஐயாவைப் பற்றியும் அவருடன் இருப்பவர்களை பற்றியும் மிகவும் அவதூறான அருவருக்கத்தக்க இழிவு படுத்துகிற அநாகரிகமான மனதை புண்படுத்துகிற செய்திகளை ஒவ்வொரு நாளும் முகநூல் பக்கம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்திகளை வெளியிட்டு பொதுமக்கள் மத்தியில் அவமானப்படுத்துகிற மிகத் தீய செயல்கள் அரங்கேற்றி வருகின்றனர். இதனால் கட்சியை தர்மத்தில் மிகுந்த குழப்பமும் மனவேதனையும் பிளவையும் ஏற்படுத்தி வருகிறது என்பதை இந்த ஒழுங்கு நடவடிக்கை கருதுகிறது. 

4.தமிழ்நாட்டில் மூத்தவர்களான ஆளுமை மிக்கவர்கள் மருத்துவர் ஐயாவிடமும் மருத்துவர் அன்புமணியிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்திய போது மருத்துவர் ஐயா அதை ஏற்றுக்கொண்டு மதித்த நிலையில் மருத்துவர் அன்புமணி பேச்சுவார்த்தையை ஏற்றுக் கொள்ளாமல் உதாசீனப்படுத்தியது 

5.மருத்துவர் ஐயா தைலாபுரம் தோட்ட இல்லத்தில் இருக்கைக்கு அருகிலேயே ஒட்டு கேட்பு கருவி வைத்தது


6.மருத்துவர் ஐயாவின் அனுமதி இல்லாமல் கலந்து ஆலோசிக்காமல் பொதுக்குழு என்ற பெயரில் ஒரு தனி நாற்காலி போட்டு துண்டு அணிவித்து படம் வைத்து அந்தக் கூட்டத்தில் புத்தி சுகாதார சுவாதீனம் இல்லாத சில விஷமிகளை தூண்டிவிட்டு மருத்துவம் கடவுள் சிலை முன்பு நின்று கொண்டு கடவுளிடம் ஐயாவுக்கு நல்ல புத்தியை கொடு என்று மருத்துவர் ஐயா அவர்களை அவமானப்படுத்தும் விதமாக செய்த நடவடிக்கையை ஏற்றும் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒழுங்கீனமான அநாகரீகமான செயலாக கருதப்படுகிறது

7.கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் ஐயாவிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் தகவலும் தெரிவிக்காமல் தன்னிச்சையாக உரிமை மீட்க தலைமுறைக்காக என்னும் பெயரில் நடை பயணம் என்ற நடை பயணத்தை மேற்கொண்டு வருவது கபட நாடகமாக இந்த ஒழுங்கு நடவடிக்கை குழு கருதுகிறது.

8.தோட்டத்திற்கு மருத்துவ ஐயா அவர்களை அன்புடன் பார்த்து நேரில் பேசி ஆசி பெற வேண்டும் வாழ்த்துக்களை பெற வேண்டும் என ஆர்வத்துடன் பார்க்க வருபவர்களை அங்கே செல்ல வேண்டாம் என வலியுறுத்தி பணம் பதவி கொடுப்பதாக ஆசை வார்த்தைகளை காட்டியும் வாகன ஏற்பாடுகள் செய்தும் அனைவருக்கு கடத்திச் சென்றது.

9.கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ஐயா அவர்கள் வெளிப்படையாகவே என்னுடைய படம் போடக்கூடாது எனது பெயரை பயன்படுத்திக் கூடாது என பலமுறை வலியுறுத்தி சொல்லியும் கூட்டங்களிலும் கட்சிக்காரர்களிடமும் என் குலசாமியான கூறிக்கொண்டு பிறரை தூண்டிவிட்டு கொச்சைப்படுத்தியும் அவமானப்படுத்தியும் தொடர்ந்து பேசி வருவது.

10.நல்லவிதமான தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கி காட்டுகிற வகையில் நல்ல வித்தியாசமான தொலைக்காட்சியை தொடங்க வேண்டுமென கொள்கை வகுத்து அரும்பாடு பட்டு மருத்துவ அய்யா அவர்களால் உருவாக்கிய மக்கள் தொலைக்காட்சியில் நீண்ட காலமாக மருத்துரையா அவர்களின் நிகழ்ச்சிகளையோ அல்லது அவரது முகத்தை கூட காட்டாமல் தொடர்ந்து இந்த தொலைக்காட்சி இயக்கி வருகிறது இறுதியில் மருத்துவ ஐயா அவர்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லாத வகையில் மக்கள் தொலைக்காட்சி திட்டமிட்டு அபகரித்துக் கொண்டது

11.நிலம் நீர் காற்று மாசுபடாமல் பாதுகாத்து அனைத்து உயிரினங்களுக்கும் அடுத்த தலைமுறைகளுக்கும் அப்படியே விட்டுச் செல்ல வேண்டும் என்ற சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும் என உயர்ந்த நோக்கத்திற்காக பசுமை தாயகம் அமைப்பை மருத்துவ ஐயா அவர்கள் தொடங்கினார்கள். ஆண்டதோறும் பல லட்சக்கணக்கான மரக் கன்றுகளை நட்டார்கள் நூற்றுக்கணக்கான ஏரிகளில் இரவு நேரங்களில் கயிற்றுக்கட்டிலிலேயே தொண்டர்களுடன் படுத்துக்கொண்டு உறங்கி உறங்கி ஏரிகளிலேயே துவங்கி தூர்வாரினார்கள். அதோடு 500க்கும் மேற்பட்ட சிறு தடுப்பணைகளை கட்டினார்கள். பாலாற்றை மற்றும் பவானி ஆற்றை காப்போம் மிதி வண்டியில் 40 கிலோ மீட்டர் தொலைவு பயணம் செய்து இது போன்ற ஏராளமான நற்காரியங்களை நிறைவேற்றி வந்த நிலையில் திட்டமிட்டு பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் அமைப்பை அமைப்பை கைப்பற்றிக் கொண்டது.

12.எல்லாவற்றிற்கும் மேலாக மருத்துவர் அன்புமணி கட்சி விதிகளுக்கு புறம்பாக நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ஐயா அவர்களின் அனுமதி பெறாமல் தகவல் ஏதும் தெரிவிக்கப்படும் என்ற பெயரால் ஒரு கூட்டத்தை கூட்டி அதில் மருத்துவர் ஐயா அவர்களுக்கென ஒரு தனி நாற்காலி போட்டு துண்டும் அணிவித்து கூட்டம் நடத்தப்பட்டது இதை பார்த்த இந்த செய்தியை அறிந்த பாட்டாளி மக்கள் கட்சியினரும் நடுலையாளர்களும் பொதுமக்களும் இப்படியா ஐயா அவர்களை அவமானப்படுத்துவது இதற்கு காலியாக போடப்பட்டுள்ள நாற்காலியில் மருத்துவ அய்யா அவர்கள் படவ வைத்து அதற்கு மாலை அணிவித்து ஊதுபத்தி கற்பூரம் கொளுத்தியது போன்ற ஊதுபத்தி கற்பூரம் கொடுத்தது போன்ற செயல் என்றும் இது மன்னிக்க முடியாத குற்ற நடவடிக்கை என்றும் இது மருத்துவ ஐயா அவர்களுக்கே இப்படியா என்று மிகுந்த வேதனையோடு பொதுமக்கள் பேசும்படி நடந்து கொண்டது.

13.பாட்டாளி மக்கள் கட்சி தலைமை அலுவலகம் சென்னை 18 தேனாம்பேட்டை 63 நாட்டு முத்த நாயகர் தெருவில் செயல்பட்டு வந்தது இடையில் கட்சியை நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ஐயா அவர்களுக்கு தெரியாமலேயே திட்டமிட்டு சென்னை 17 6 தியாகராய நகர் 10 திலக்துறை என்ற முகவரிக்கு மாற்றியது.

14, மருத்துவர் ஐயா அவர்களால் 30.5.2025க்கு பின்னர் பாட்டாளி மக்கள் கட்சியின் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்ட அனைத்து நியமனங்களும் செல்லும் நீடிக்கும் மருத்துவர் ஐயாவால் நியமிக்கப்பட்ட அனைத்து நியமனங்களும் செல்லும் அது நீட்டிக்கும். 30/5/2025க்கு முன்னர் மருத்துவர் ஐயா அவர்களால் நியமனம் செய்யப்பட்டு சிலர் நீக்கப்பட்டோம் அதை தொடர்ந்து அதற்கு அடுத்து மருத்துவர் அன்புமணி அவர்களால் பொறுப்புகளில் அவர்களே தொடர்வார்கள் என்ற அறிவிப்பும் எந்த வகையிலும் செல்லாது செல்லத்தக்கது அல்ல.

15. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவரையா அவர்களிடம் ஏதும் பேசாமல் பொதுநலையில் பொதுவெளியில் 40 தடை 40 தடவை பேசியதாக பொய் பேசியது.

16.சட்டமன்ற குழு தலைவர் சாமானியன் ஜிகே மணி மற்றும் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அளிக்கும் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருந்த நிலையில் இருவரும் குணமடைய கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் என கேலி கிண்டலாக பேசி சிரித்தது இப்படி 16 வகையான ஒழுங்கு நடவடிக்கை குழு ஆய்வு செய்து அறிக்கையை நம்முடைய சமூக நீதி காவலர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் ஐயா அவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்திருக்கிறது என்பதை இந்த பொதுக்குழு வாயிலாக தெரிவித்துக் கொள்கிறோம் இந்த ஐயா அவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு அனுப்பப்பட்ட இந்த 16 அம்சங்களையும் நீங்கள் ஒருமனதாக ஏற்று நிறைவேற்றி தருமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

Pmk

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: