gk-vasan | தமிழ்நாட்டில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்தக் கூட்டணி மக்களவை தேர்தலுக்கு முன்பாக பிரிந்தது. தற்போது அதிமுகவும், பாஜகவும் தனித்தனியாக மக்களை தேர்தலை சந்திக்க உள்ளன.
மறுபுறம் திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதனால், அதிமுக, பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எந்தக் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளன என்ற பேச்சும் அடிபட்டுவருகிறது. இந்த நிலையில், ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் எந்தக் கட்சியுடன் கூட்டணி சேர போகிறது என்று கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி.யுடன் கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், “தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தற்போது யாருடனும் கூட்டணியில் இல்லை. பாரதிய ஜனதா மற்றும் அ.தி.மு.க. உடன் நட்புறவோடு செயல்படுகிறோம்” என்றார். மேலும், கூட்டணி குறித்து ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“