2024 மக்களவை தேர்தல் அடுத்த இரு மாதங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைக்கும் என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் கூறினார்.
இது குறித்து பேட்டியளித்த அவர், “தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி குறித்து பல்வேறு விதமான செய்திகள் வெளியிடப்படுகின்றன.
இது குழப்பத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற காரியங்களில் செய்தி நிறுவனங்கள் ஈடுபடக் கூடாது. தமிழ் மாநில காங்கிரஸ் யாருடன் கூட்டணி என்பது குறித்து வரும் தினங்களில் அறிவிக்கப்படும்” என்றார்.
த.மா.காங்கிரஸ் கடந்த தேர்தலை அதிமுகவுடன் இணைந்து சந்தித்தது. இந்தத் தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி பிரிந்து விட்டது. இதனால் அக்கூட்டணியில் இடம் பிடித்த பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இன்னமும் தங்களின் நிலைப்பாட்டை அறிவிக்காமல் உள்ளன.
காங்கிரஸை பொறுத்தமட்டில் திமுக கூட்டணியில் உள்ளது. இது தவிர திமுக கூட்டணியில் இடதுசாரிகள் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன.
இதில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் சில மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இன்று மயிலாடுதுறையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தேசியக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை” என அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“