மும்மொழி கொள்கை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் ஹிந்தி மொழியை படிக்கலாம் தயவு செய்து அரசியலக்காதீர்கள் கடலூரில் ஜி .கே வாசன் தெரிவித்துள்ளார்.
கடலூரில் இன்று தனியார் விடுதியில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடலூர் மாவட்டம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வட்டார நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்
இந்த கூட்டம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றதேர்தலில் தமிழ்மாநில கட்சியின் சார்பில் எப்படி களப்பணி ஆற்றுவது மற்றும் நிர்வாகிகள் கருத்துக்களையும் கேட்டறிவதற்காக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் ஜி .கே வாசன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், "மும்மொழி கொள்கை என்பது தேவையானது என்றும் தயவு செய்து அதை அரசியலாக்காதீர்கள் விருப்பம் உள்ளவர்கள் படிக்கட்டும்" என்று கூறினார்
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வீட்டிற்கு காவல்துறை சென்றது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "துஷ்பிரயோகம், அத்துமீறுதல் கூடாது. மிரட்டல் கூடாது. நாளை அனைத்து கட்சிக்கும் நடக்கும் என்றும் நியாயத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் தொகுதி சீரமைப்பு திட்டம் இன்னும் எந்த வரவமைப்பும் கட்டமைக்கவில்லை என்றும் இதை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா-வே கூறிவிட்டார் என்றும் கூறினார்
செய்தி: பாபு ராஜேந்திரன் - கடலூர் மாவட்டம்.