பா.ஜ.க கூட்டணியில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் த.மா.கா வேட்பாளர் வேணுகோபாலுக்கு தவறுதலாக கை சின்னத்தில் வாக்கு சேகரித்த த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன், பின்னர் தவறுதலாகக் கூறிவிட்டதை உணர்ந்து புத்திசாலித் தனமாக மாற்றிப் பேசி சமாளித்த வீடியோ வைரலாகி வருகிறது.
மக்களவைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் புதன்கிழமை (27.03.2024) உடன் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் பிரசாரம் கொளுத்தும் வெயிலில் சூடுபிடித்து உச்ச கட்டத்தை எட்டி வருகிறது.
இந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜி.கே. வாசன் தலைமையிலான த.மா.கா-வுக்கு ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 3 தொகுதிகளிலும் த.மா.கா சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறது.
த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன், தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், ஜி.கே. வாசன் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வி.என். வேணுகோபாலை ஆதரித்து மாங்காடு பகுதியில் வாக்கு சேகரித்தபோது, தவறுதலாக, வேணுகோபாலுக்கு கைச் சின்னத்திலே வாக்களியுங்கள் என்று தவறுதலாக கூறிவிட்டார். சைக்கில் சின்னத்திலே வாக்களியுங்கள் என்று கேட்பதற்கு பதிலாக கைச்சின்னத்திலே வாக்களியுங்கள் என்று தவறுதலாக வாக்கு கேட்டுவிட்டதை உணர்ந்து அதை புத்திசாலித் தனமாக ஜி.கே. வாசன் சமாளித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் த.மா.கா வேட்பாளர் வி.என். வேணுகோபாலை ஆதரித்து பிரசாரம் செய்த ஜி.கே. வாசன், வேணுகோபாலுக்கு கைச் சின்னத்திலே வாக்களியுங்கள் என்று தவறுதலாகக் கூற வந்ததை உணர்ந்து, கையில் இருந்து சைக்கிள் சின்னம் பொம்மையை எடுத்து கையைத் தள்ளுங்கள் என்று கூறி புத்திசாலித் தனமாக சமாளித்தார்.
த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன், தவறுதலாக கைச் சின்னத்தில் வாக்கு கேட்டுவிட்டு பின்னர், அதை உணர்ண்து புத்திசாலித் தனமாக மாற்றிப் பேசி சைக்கிள் சின்னத்தில் வாக்கு கேட்டு சமாளித்த வீடியோ வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“