/tamil-ie/media/media_files/uploads/2022/12/886667.jpg)
GKM Tamil Kumaran
பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் அறிவித்துள்ளார்.
பாமகவின் இளைஞர் அணித்தலைவராக இருந்த அன்புமணி,கடந்த மே மாதம் இறுதியில் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சியின் தலைவராக இருந்த ஜி.கே.மணி கவுரவத் தலைவரானார்.
இதையடுத்து கட்சியின் இளைஞர் அணித் தலைவராக ஜி.கே.எம்.தமிழ்க்குமரன் கடந்த அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார். இவர் ஜி.கே.மணியின் மகன். லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகவும் உள்ளார்.
இந்நிலையில் தமிழ்க்குமரன் தான் வகித்து வந்த பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2022/12/FlRShqAaAAA7mub.jpg)
இது தொடர்பாகக் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “பாட்டாளி மக்கள் கட்சியில் இளைஞரணி தலைவர் பொறுப்பை தாங்களே விரும்பி எனக்கு நியமனக் கடிதம் வழங்கினீர்கள். சில சூழ்நிலை காரணமாக இந்த பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.