அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் தற்போது சிறையில் இருந்து வெளியே வந்தார். இந்த நிலையில் அவரை மீண்டும் சென்னை போலீஸார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். அதன்படி, சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பல்வேறு பகுதிகளில் கிட்டத்தட்ட 7 வீடுகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக ஞானசேகரன் வாக்குமூலம் அளித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 7 வீடுகளில் சுமார் 200 சவரன் நகைகளை கொள்ளையடித்ததாகவும் காரில் சென்று நோட்டமிட்டு கொள்ளையடித்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அந்த நகைகளை விற்ற பணத்தில் சொகுசு கார் வாங்கியதாகவும், பிரியாணி கடை வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்ததாக போலீஸ் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான வழக்குகளில் அவர் வேறு எங்காவது கைது செய்யப்பட்டாரா? என்பது குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது.