எழுத்தாளர் ஞாநி சங்கரன் மரணம் : திடீர் மூச்சுத் திணறலால் உயிர் பிரிந்தது

ஞாநி சங்கரன், தமிழகம் அறிந்த எழுத்தாளர், விமர்சகர், பத்திரிகையாளர்! 63 வயதான அவர், உடல் நலக்குறைவால் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார்.

ஞாநி சங்கரன், தமிழகம் அறிந்த எழுத்தாளர், விமர்சகர், பத்திரிகையாளர்! 63 வயதான அவர், உடல் நலக்குறைவால் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார்.

ஞாநி சங்கரன், செங்கல்பட்டில் பிறந்தவர். இவரது இயற்பெயர் வே. சங்கரன். ஆங்கிலப் பத்திரிகையாளர் வேம்புசாமியின் மகன் ஆவார். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞாநிக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது, போகும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

ஞாநி சங்கரன், எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். கூர்மையாக அரசியல் விமர்சனங்களை வைக்கக்கூடியவர். ஆம் ஆத்மி சார்பில் தேர்தல் களத்திலும் நின்றார். ஞாநியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close