/indian-express-tamil/media/media_files/ZBiwvaoE9niIdBdMDOOT.jpg)
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் கோவா முதல்வர் மரியாதை செலுத்தினார்
முத்துராமலிங்கத் தேவரின் 116-வது ஜெயந்தி மற்றும் 61வது குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் கோவா மாநில முதல் அமைச்சர் பிரமோத் சாவந்த் மரியாதை செலுத்தினார்.
அப்போது தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் என பலர் உடனிருந்தனர்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் அண்ணாமலை, “சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியவர். குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்துப் போராடி, ஒரு பெரும் சமூகத்தின் விடுதலைக்கு முக்கியப் பங்காற்றியவர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள், பட்டியல் சமுதாய மக்களும் சென்று வழிபட உரிமை பெற்றுத் தந்தவர்களில் முக்கியமானவர்.
தெய்வத்திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் குருபூஜையன்று, பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் ஐயா திருக்கோவிலில், மாண்புமிகு கோவா மாநில முதலமைச்சர் திரு @DrPramodPSawant அவர்கள் மற்றும் @BJP4Tamilnadu மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் சென்று தெய்வத்திருமகனாரை… pic.twitter.com/EuK3dcNJ0h
— K.Annamalai (@annamalai_k) October 30, 2023
அரசியல் மற்றும் ஆன்மீகத்தில் மாபெரும் புரட்சி செய்த ஐயா முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் புகழ் போற்றி வணங்குகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தெய்வத்திருமகனார் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையன்று, பசும்பொன்னில் அமைந்துள்ள தேவர் ஐயா திருக்கோவிலில் வணங்கினோம்” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.