Advertisment

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி: கோவா நில விவகாரத்தில் பின்வாங்கிய மத்திய அமைச்சர்

வடக்கு கோவாவிலிருந்து 6 முறை பா.ஜ.க எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவரிடமிருந்து திஸ்வாடி தாலுகாவில் உள்ள பனெலிம் கிராமத்தில் 14,225 சதுர மீட்டர் பழத்தோட்டம் மற்றும் இயற்கை நிலத்தை மறுசீரமைக்க கோரி விண்ணப்பம் பெறப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
UM nAIK

இரண்டு மாநில அமைச்சர்கள், கட்சி வேறுபாடுகளைக் கொண்ட அரசியல்வாதிகள் மற்றும் கோவாவில் உள்ள பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சர்ச்சைக்குரிய நிலப் பயன்பாட்டுச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றத்தின் பயனாளிகள் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு, மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக், நேற்று வெள்ளிக்கிழமை, பேசுகையில், "எந்தவித சட்ட விரோதங்களும் கண்டறியப்பட்டால், தனது விண்ணப்பத்தை திரும்பப் பெறத் தயார்" என்றார். சட்ட மாற்றத்தால் பயன்பெறும் நபர்களில் இவரும் ஒருவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisment

இதுகுறித்து செப்டம்பர் 9 அன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது, டி.சி.பி துறையானது கடந்த 18 மாதங்களில் குறைந்தபட்சம் 20 லட்சம் சதுர மீட்டர் நிலத்திற்கான நில பயன்பாட்டில் மாற்றத்தை அனுமதித்தது, "பசுமை மண்டலங்களை" "குடியிருப்புகளாக" மாற்றியது - குடியிருப்பு மற்றும் கட்டுமான நடவடிக்கைகளை அனுமதிக்கிறது. வணிக நோக்கங்களுக்காக, நிலத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது.

கோவா டி.சி.பி  சட்டம் 1974க்கு மார்ச் 2023 திருத்தம், பிரிவு 17 (2) க்குப் பிறகு இந்த மாற்றங்கள் அனுமதிக்கப்பட்டன, இது "தற்செயலான பிழைகளை சரிசெய்ய" அல்லது "முரண்பாடான பிழைகளை சரிசெய்ய" கோரிக்கையுடன் உரிமையாளர் துறையை அணுகினால், பொது ஆலோசனையின்றி மனைகளை மாற்ற அனுமதிக்கிறது.

நாயக் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “எனது குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகளின் ஆலோசனையின் பேரிலும், எனது கோவா சகோதர சகோதரிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், பொது நலன் கருதியும், எனது விண்ணப்பத்தை வாபஸ் பெற்று, சரணடைய முடிவு செய்துள்ளேன். 

சட்டத்திற்கு புறம்பானது ஏதேனும் கண்டறியப்பட்டால் மற்றும் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால், விண்ணப்பத்தை திரும்ப பெறுவேன். மாநில அரசால் இயற்றப்பட்ட TCP சட்டத்தின் 17(2) இன் கீழ் உள்ள விதி சட்டவிரோதமானது எனக் கண்டறியப்பட்டாலும் அல்லது நடைமுறையில் ஏதேனும் முரண்பாடு காணப்பட்டாலும் எனது விண்ணப்பத்தைத் திரும்பப் பெற நான் தயாராக இருக்கிறேன். டிசிபி சட்டத்தின் 17(2) விதி மாநிலத்தின் நலனுக்கானதா இல்லையா என்பதை மாநில அரசுதான் சரிபார்க்க வேண்டும்.

ஆங்கிலத்தில் படிக்க:    Express Impact: Will withdraw Goa land use application if ‘illegalities’ found, says Union Minister Shripad Naik

"எனது விண்ணப்பம் கோவா அரசாங்கத்தின் டி.சி.பி துறை விதிகளில் பரிந்துரைக்கப்பட்ட வழக்கமான நடைமுறையின்படி அனுப்பப்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் வழக்கமான செயல்முறை மூலம், எனது விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டது. இந்த முழு நடைமுறையும் செய்ய 8 மாதங்கள் எடுத்தது, இது ஒரு வெளிப்படையான செயல்முறையைப் பின்பற்றுவதை தெளிவாகக் குறிக்கிறது, மேலும் எனது நிலைப்பாட்டில் நான் விதிகளை மீறி எதையும் செய்யவில்லை.

 மாநில அரசு வகுத்துள்ள அனைத்து சட்டங்களையும் பின்பற்றி, ஒப்புதல்களைப் பெறஎனக்கு விதிக்கப்பட்ட அனைத்து கட்டணங்களையும் செலுத்தினேன். . நான் சட்டத்தை மீறியோ அல்லது தவறான நோக்கத்துடன் எதையும் செய்யவில்லை. எனது பொது வாழ்வில் நான் எந்த மோசடியிலும் சர்ச்சையிலும் சிக்கியதில்லை, தவறுதலாக கூட இப்போது எதிலும் ஈடுபட விரும்பவில்லை,” என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment