நீதிபதியை அவதூறாக பேசிய வழக்கில் கோகுல்ராஜ் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளியான யுவராஜ் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பட்டியலின பொறியியல் மாணவர் கோகுல்ராஜ். இவர், வேறு சமூகத்தை சேர்ந்த தன்னுடன் பயின்ற சுவாதி என்ற பெண்ணை காதலித்தார். இருவரும் கடந்த 2015ஆம் ஆண்டு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சந்தித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்: 2023-ம் ஆண்டு பணிகள் குறித்து ஆர்.எஸ்.எஸ் ஆலோசனை: பா.ஜ.க தலைவர்கள் பங்கேற்பு
இந்த நிலையில், கோகுல்ராஜ் வீடு திரும்பவில்லை. அவர் நாமக்கல் கிழக்கு தொட்டிபாலம் ரயில்வே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது இது சாதி ஆணவ படுகொலை என்பது தெரியவந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் யுவராஜ் அவரது கார் ஓட்டுநர் அருணன் ஆகியோருக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் தவிர 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மொத்தம் 10 பேர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். 5 பேர் விடுவிக்கப்பட்டனர்.
கீழமை நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்டோர் தண்டனை பெற்ற 10 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளனர்.
இதற்கிடையில், கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளியான யுவராஜ், வழக்கு விசாரணையின் போது, நீதிபதியை அவதூறாக பேசியதாக அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், கோகுல்ராஜ் கொலை வழக்குடன் நீதிமன்ற அவதூறு வழக்கு, நாமக்கல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு விசாரணைக்காக கோவை சிறையில் இருந்து யுவராஜ், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, மீண்டும் இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil