Advertisment

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீர்ப்பு: கண்ணீர் மல்க நன்றி கூறிய தாயார் சித்ரா

இளைஞர் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், யுவராஜ் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான தண்டனையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி செய்தது.

author-image
WebDesk
Jun 02, 2023 17:22 IST
gokulraj case

தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேர், மதுரை சிறப்பு அமர்வு நீதிமன்றத்தால் மார்ச் 2022 இல் தண்டனை விதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர்.

Advertisment

நாமக்கல் திருச்செங்கோட்டில் கடந்த 2015-ம் ஆண்டு தலித் இளைஞர் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கவுண்டர் சாதி அமைப்பின் தலைவர் யுவராஜ் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான தண்டனையை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி செய்தது.

ஆதிக்க கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதி என்ற பெண்ணை காதலிப்பதாக சந்தேகத்தின் பேரில் கோகுல்ராஜ் (21) கடந்த 2015ஆம் ஆண்டு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பத்து பேர், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தனர், மார்ச் 2022 இல் தங்களுக்கு மதுரை சிறப்பு அமர்வு நீதிமன்றம் தண்டனை வழங்கிய சிறிது நேரத்திலேயே, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் எம்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் மேல்முறையீட்டு மனுக்களை ஜூன் 2 (வெள்ளிக்கிழமை) தள்ளுபடி செய்து முந்தைய தீர்ப்பை உறுதி செய்தனர்.

உயர்நீதி மன்றத்தின் இந்த தீர்ப்புக்கு கண்ணீர் மல்க கோகுல்ராஜின் தாயார் சித்ரா நன்றி கூறினார்.

"எந்த தவறும் செய்யாத என் மகனுக்கு இந்த அநீதி இழைக்கப்பட்டது, அதற்கு நீதி வழங்கியதற்கும், இழைத்தவர்களுக்கு தக்க தண்டனை வழங்கியதற்கும் நீதிபதிகளுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்", என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment