திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் வெள்ளிக்கிழமை, சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடந்து கொண்டார்.
அவரை தனியாக அழைத்து சோதனை செய்த போது அவர் தனது உள்ளாடையில் பேஸ்ட் வடிவில் மறைத்து எடுத்து வந்த ரூ.15 லட்சத்து 75 ஆயிரத்து 567 மதிப்புள்ள 281 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது.
உடனே அதை பறிமுதல் செய்து அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்தில் இந்த ஒரு மாதத்தில் மட்டும் பல கோடிக்கு மேல் கடத்தல் தங்கம் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“