கூவத்தூரில் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களை தக்க வைக்க தங்கம், பணம் சப்ளை: ஓ.பி.எஸ் அதிரடி குற்றச்சாட்டு

கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்களை தக்க வைக்க தங்கம் மற்றும் பணம் கொடுக்கப்பட்டதாக ஓ.பி.எஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
OPS and EPS

ஆட்சியமைக்க கூவத்தூரில் தங்கம், பணம் வழங்கல் - ஓ.பி.எஸ்

ஆட்சியமைக்க கூவத்தூரில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் தங்கம், பணம் உள்ளிட்டவை வழங்கப்பட்டதாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தந்தி டிவிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது,

Advertisment

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு கூவத்தூர் ரிசார்ட்டில், அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், பல கோடி பணம் மற்றும் தங்கம் கைமாறியதாகக் கூறப்பட்டது. மேலும் அதன் மூலமே, எடப்பாடி பழனிசாமி முதல்வர் சீட்டைப் பிடித்தார் எனவும் பல விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தந்தி டிவிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, "கூவத்தூரில் நடந்த அக்கிரமங்கள், அநியாயங்கள் எல்லோருக்கும் தெரியும். ஆட்சி அமைக்க ஜனநாயகத்திற்கு விரோதமான அனைத்து செயல்களையும் எடப்பாடி பழனிச்சாமி செய்ததாக" தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், " அனைத்து எம்.எல்.ஏக்களையும் தங்கள் பக்கம் தக்க வைக்கவும் தூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பதற்கு தங்கம், பணம் கொடுக்கப்பட்டதாகவும்" கூறினார்.

Ops Eps Koovathur

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: