Advertisment

நெல்லை, தூத்துக்குடி விவசாயிகளுக்கு குட் நியூஸ்; தாமிரபரணி கால்வாய்களில் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு

தாமிரபரணி ஆற்றில் உள்ள கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) உத்தரவிட்டது. இதனால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Thamirabarani x

தாமிரபரணி ஆற்றில் உள்ள கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

தாமிரபரணி ஆற்றில் உள்ள கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) உத்தரவிட்டது. இதனால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisment

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 

“திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய், மருதூர் கீழக்கால் கால்வாய், தெற்கு பிரதான கால்வாய் மற்றும் வடக்கு பிரதான கால்வாய்களின் கீழுள்ள 86,107 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன பரப்புகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு 28.10.2024 முதல் 31.03.2025 வரை தண்ணீர் திறந்துவிடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால், திருநெல்வேலி மாவட்டத்தில், வடக்கு கோடைமேலழகியான் கால்வாய் (2,260 ஏக்கர்), தெற்கு கோடை மேலழகியான் கால்வாய் (870 ஏக்கர்), நதியுண்ணி கால்வாய் (2,460 ஏக்கர்), கன்னடியன் கால்வாய் (12,500 ஏக்கர்), கோடகன் கால்வாய் (6,000 ஏக்கர்), பாளையங்கால்வாய் (9,500 ஏக்கர்), திருநெல்வேலி கால்வாய் (6,410 ஏக்கர்) மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய் (12,762 ஏக்கர்), மருதூர் கீழக்கால் கால்வாய்(7,785 ஏக்கர்), தெற்கு பிரதான கால்வாய் (12,760 ஏக்கர்) மற்றும் வடக்கு பிரதான கால்வாய் (12,800 ஏக்கர்) ஆகியவைகளின் கீழுள்ள மொத்தம் 86,107 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசன பரப்புகள் பாசன வசதி பெறும்” என்று கூறப்பட்டுள்ளது.


தாமிரபரணி ஆற்றில் உள்ள கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thamirabarani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment