தமிழ்நாடு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகி உள்ளது. தமிழகத்திலும் ‘பாரத் பிராண்ட்’ பெயர்களில் பருப்பு வகைகள் மற்றும் பாரத் ஆட்டா, பாரத் கோதுமை உள்ளிட்ட பொருட்களை மானிய விலையில் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசின் என்.சி.சி.எஃப் (NCCF) அமைப்பு தொடங்கி இருக்கிறது.
தமிழ்நாட்டில் 50 நடமாடும் வேன்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களின் முக்கிய இடங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிக தரம் வாய்ந்த பருப்பு வகைகளை மானிய விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.
இந்தியாவில் விலைவாசியை குறைக்வும், உணவு பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், உணவு தானியங்களை மானிய விலையில் விற்பனை செய்யும் ‘பாரத் பிராண்ட்’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்துக்கு, வடமாநிலங்களில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, தமிழகத்திலும் ‘பாரத் பிராண்ட்’ பெயர்களில் பருப்பு வகைகளை மானிய விலையில் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசின் என்.சி.சி.எஃப் (NCCF) அமைப்பு தொடங்கி உள்ளது.
அந்தவகையில், தமிழ்நாட்டில் 50 நடமாடும் வேன்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நகரம் மற்றும் கிராமங்களின் முக்கிய இடங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அதிக தரம் வாய்ந்த பருப்பு வகைகளை மானிய விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, துவரம்பருப்பு 1 கிலோ 60 ரூபாய்க்கும், 1 கிலோ கோதுமை 27.50 ரூபாய்க்கும் கிடைக்கிறது. கோதுமையிலும் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், ‘பாரத் ஆட்டா’ என்ற பெயரில், 1 கிலோ கோதுமை மாவு, 27.50 ரூபாய்க்கு விற்பனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக தமிழகத்திற்கு, 1,000 டன் கோதுமை மாவும் கடந்த வாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த மாவு விற்பனை செய்யும் பணியை, ‘நாபெட்’ என்ற மத்திய கூட்டுறவு நிறுவனம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இப்போது வெளிச்சந்தையில் அரிசி விலையும் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கிலோ பொன்னி பழைய அரிசி விலை, 55 ரூபாயாக உள்ளது. அதேபோல, கடந்த வாரம், "பாரத் ரைஸ்" என்ற பெயரில், கிலோ அரிசியை, 29 ரூபாய்க்கு விற்பனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது.
தமிழ்நாட்டில் மொத்தம், 5 லட்சம் டன் பாரத் அரிசி விற்பனை செய்யப்பட உள்ளது. அதில் தமிழகத்திற்கு, 22,000 டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாரத் அரிசி 5 கிலோ மற்றும் 10 கிலோ அளவில் கிடைக்கும். இந்த அரிசியை விற்பனை செய்ய தேசிய வேளாண் கூட்டுறவு இணையம், தேசிய கூட்டுறவு நிதி மற்றும் மத்திய பண்டகசாலை, கேந்திரிய பந்தர் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்கள் சென்னை உட்பட முக்கிய நகரங்களில் வேன்களில், பாரத் அரிசியை விற்பனை செய்ய உள்ளன. கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக பாரத் அரிசி, பாரத் கோதுமை மாவு விற்பனை செய்யுமாறு மத்திய அரசை கூட்டுறவு துறை வலியுறுத்தியுள்ளது.
இதில் குறிப்பாக, 100 டன் அளவுக்கு பாரத் ஆட்டா, குறிப்பிட்ட அளவு அரிசியை, கூட்டுறவு அங்காடிகள் வாயிலாக விற்பனை செய்யுமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தியி உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழக மக்களுக்கு பெரும் பலனையும், வரவேற்பையும் பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.