scorecardresearch

சரக்கு ரயில் தடம் புரண்டது: பெங்களூரு- சேலம் ரயில் சேவை நிறுத்தம்

பெங்களூருவிற்கு யூரியா ஏற்றி சென்ற சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதில் பெங்களூரு- சேலம் இடையே ரயில் சேவைகள் நிறுத்தம்.

Train derails
Train derails

தூத்துக்குடியிலிருந்து பெங்களூருவிற்கு யூரியா ஏற்றி சென்ற சரக்கு ரயில் இன்று (ஏப்ரல் 21) காலை தருமபுரி வழியாக பெங்களூருவிற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்த ரயிலின் 6 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து கீழே இறங்கி தடம் புரண்டது.

இதனால் பெங்களூரு- சேலம் மார்க்கமாக செல்லும் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த வழியாக செல்லும் திருச்சி வழியாக செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ், காரைக்கால், பெங்களூர் சிட்டி லோக்மான்யா திலக் உள்ளிட்ட ரயில்கள் திருப்பத்தூர் வழியாக மாற்றிவிடப்பட்டுள்ளது. தற்போது தடம்புரண்ட 6 பெட்டிகளையும் சரிசெய்யும் பணியில் ரயில்வே துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

செய்தி: க. சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Goods train derails in tn rail traffic disrupted