Advertisment

கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு; 2 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட வழக்கில் கைதான இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்

author-image
WebDesk
New Update
கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு; 2 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

Goonda charge against 2 persons for Kovai Periyar statue desecrated: கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட வழக்கில் கைதான இருவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

கோவை வெள்ளலூரில் திராவிடர் கழகத்துக்கு சொந்தமான தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் படிப்பகத்தின் நுழைவுவாயிலில் தந்தை பெரியாரின் உருவச் சிலை உள்ளது. இந்த சிலையை கடந்த 8-ம் தேதி இரவு மர்மநபர்கள் செருப்பு மாலை அணிந்தும் தலை பகுதியில் குங்குமத்தை தூவிவிட்டும் அவமரியாதை செய்ததாக தெரிகிறது.

இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் நள்ளிரவில் 2 பேர் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்தது தெரியவந்தது.

அதை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் பெரியார் சிலைக்கு அவமதிப்பு செய்தது இந்து முன்னணியை சேர்ந்த அருண் கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் ஜனவரி 10-ம் தேதி அன்று கைது செய்தனர்.

இந்தநிலையில், இன்று கைது செய்யப்பட்ட அருண் கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கோவை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Periyar Coimbatore Periyar Statue Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment