Advertisment

2 பட்டியலின இளைஞர்களைத் தாக்கி சிறுநீர் கழித்த சம்பவம்... 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூர் அருகே 2 பட்டியலின இளைஞர்களைத் தாக்கி அவர்கள் மீது சிறுநீர் கழித்ததாக கைது செய்யப்பட்ட 6 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Arrest

2 பட்டியலின இளைஞர்களைத் தாக்கி சிறுநீர் கழித்த சம்பவம்... 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது 

திருநெல்வேலி மாவட்டத்தில் 2 தலித் இளைஞர்கள் மீது ஆதிக்க சாதியைச் சேர்ந்த 6 பேர் தாக்குதல் நடத்தி சிறுநீர் கழித்த இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் ஜாமீனில் வெளிவராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பல அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Goondas Act slapped on 6 TN men held for assaulting, urinating on 2 Scheduled Caste youths

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய பட்டியல் இன ஆணையத்தின் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, அறிக்கை சமர்ப்பிப்பதாகவும், அதைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை தொடங்கப்படும் என்றும் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரில் அக்டோபர் 30-ம் தேதி 2 பட்டியலின இளைஞர்களின் ஆடைகளை அவிழ்த்து அவர்களைத் தாக்கி, அவர்கள் மீது சிறுநீர் கழித்த சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பட்டியலின இளைஞர்களைத் தாக்கி அவர்கள் மீது சிறுநீர் கழித்ததாக கைது செய்யப்பட்ட 6 பேரும் கடுமையான குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி காவல்துறை இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஆதிக்க சாதியைச் சேர்ந்த குற்றவாளிகளை ஒரு நாள் கழித்து கைது செய்து அவர்கள் மீது பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

இதுகுறித்து போலீஸார் வியாழக்கிழமை கூறியதாவது: தாழையூத்தைச் சேர்ந்த எம். பொன்னுமணி (25), மணக்காடு பகுதியைச் சேர்ந்த எஸ். நல்லமுத்து (21), ஜி. லட்சுமணகுமார் (19), எஸ். ஆயிரம் (19), பி. ராமர் (22), எம். சிவன் (22) ஆதிக்க சாதியைச் சேர்ந்த இவர்கள் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களைத் தாக்கியதற்காக, திருநெல்வேலி காவல் ஆணையர் மகேஸ்வரி உத்தரவின் பேரில், பாளையங்கோட்டை மத்திய சிறையில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கடந்த அக்டோபர் 30-ம் தேதி மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்த மனோஜ்குமார், மாரியப்பன் இருவரும் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். திரும்பி வரும் வழியில், குடிபோதையில் இருந்த 6 பேர் கொண்ட கும்பல் தங்களை வழிமறித்ததாக அவர்கள் தெரிவித்தனர். ஊடகங்களிடம் பேசிய இருவரும், இந்த 6 பேர் கொண்ட கும்பல் தங்கள் சொந்த ஊர் மற்றும் சாதி குறித்து விசாரித்ததாகவும், அவர்கள் ஒரு பட்டியலின குக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்ததும், அவர்கள் தங்களின் ஆடைகளை அவிழ்த்து, தாக்கியதாகவும், சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்த செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரத்தை அந்த கும்பல் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். பல அரசியல் கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் ஜாமீனில் வெளிவராமல் இருப்பதை உறுதிசெய்யவும் தமிழக அரசை வலியுறுத்தினர்.

பின்னர், தேசிய பட்டியல் சாதியினருக்கான ஆணையத்தின் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து, அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகவும் அதைத் தொடர்ந்து அடுத்த நடவடிக்கை தொடங்கப்படும் என்றும் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dalit
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment