Advertisment

கவுண்டமணியின் நிலத்தை ஒப்படைக்க கோரிய வழக்கு: கட்டுமான நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பிறகு, கவுண்டமணியின் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க கோரிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

author-image
WebDesk
New Update
goundamani

Goundamani Land case

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகர் கவுண்டமணியின் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க கோரிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கட்டுமான நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை  உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Advertisment

கடந்த 1996ம் ஆண்டு நளினி பாய் என்பவருக்கு சொந்தமான சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் இருந்த நிலத்தை நடிகர் கவுண்டமணி விலைக்கு வாங்கினார். அதை ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் அளித்து, 22,700 சதுர அடி பரப்பளவில் வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டி முடிக்க வேண்டும் என இரு தரப்பும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

கட்டுமான பணிகளுக்காகவும், ஒப்பந்ததாரர் கட்டணமாகவும் 3 கோடியே 58 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் போடப்பட்டது.

1996ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரை ஒரு கோடியே 4 லட்சம் ரூபாயை நடிகர் கவுண்டமணி, கட்டுமான நிறுவனத்திற்கு செலுத்தி இருந்தார். ஆனால் 2003ம் ஆண்டு வரை கட்டுமான பணிகளைத் தொடங்கவில்லை. இது தொடர்பாக நடிகர் கவுண்டமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, சம்பந்தப்பட்ட கட்டடத்தை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தது. 

வழக்கறிஞர் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில்,  கவுண்டமணி இடம் இருந்து பெற்ற 5 கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என்றும்,  கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மாதம் ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் வீதம் இழப்பீடாக கவுண்டமணிக்கு வழங்க வேண்டும் என்றும், தீர்ப்பளித்தது.

இதனிடையே உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, கட்டுமான நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மனு  நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கட்டுமான நிறுவனம் தரப்பில், 3 தவணையாக முதலில் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தப்பட்டது.  அதன் பின்னர் ரூ. 3 கோடி வரை தரப்படவில்லை. இந்த பாக்கி தொகையை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் உத்தரவு பிறப்பித்தது.

2008ம் ஆண்டு முதல், மாதம் ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் வீதம் வட்டி கணக்கீட்டு வழங்க வேண்டும் என்பதும் உயர்நீதிமன்ற உத்தரவாக உள்ளது. ஒப்பந்தம் போட்டது போல முழு தொகையும் செலுத்ததாத நிலையில் எவ்வாறு அதனை வழங்க முடியும், என தெரிவித்தனர்.

அப்போது கவுண்டமணி தரப்பில், இந்த விவகாரத்தில் அந்த மொத்த நிலமும் தங்களுடையது.  அந்த நிலத்தில் கட்டுமானத்தை மேற்கொள்ள ரூ. 1. 4 கோடி வழங்கப்பட்டது.  ஆனால் கட்டுமானம் குறிப்பிட்ட கால வரம்பில் கட்டப்படவில்லை.  இதனையடுத்து வழக்கறிஞர் ஆணையர் நியமனம் செயப்பட்டு,  அவரின் அறிக்கையின்படியே உயர்நீதிமன்றம் நிலத்தை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டது, எனத் தெரிவித்தனர்.

இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  கவுண்டமணியின் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க கோரிய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ததோடு, கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் நடிகர் கவுண்டமணியின் நிலத்தை மீண்டும் அவரிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment