கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்ரவிட்டுள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரின், பணி நியமனத்துக்கு ரூ. 30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், லஞ்ச ஒழிப்புப் போலீசார் கணபதியை சமீபத்தில் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக செயல்பட்ட வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜுவையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், துணைவேந்தர் லஞ்சம் வாங்கியது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று, ஸ்டாலின், திருநாவுகரசர் போன்ற அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.துணை வேந்தர் கணபதி பணிக்காலத்தில் நியமனம் செய்யப்பட்ட அனைத்து பேராசிரியர்களின் தகுதியையும் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், லஞ்ச பணத்தை கணபதி ஆன்லைன் பண பரிவர்த்தனை பெற்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து. லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள துணைவேந்தர் கணபதி பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிரடியாக உத்ரவிட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை இந்த பணியிடை நீக்கம் தொடரும் என்றும், ஆளுநர் மாளிகையில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.