ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத்தில் இடம்பெற்றிருக்கும் தண்டனை விவரங்கள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு 3 மாத சிறை, ரூ.5,000 அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவோருக்கு ரூ.5 லட்சம் அபராதம், ஓராண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
சூதாட்டத்தை நடத்தும் நிறுவனம்/ நபர்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம், 3 ஆண்டு சிறை அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும்.
இரண்டாம் முறை தவறிழைக்கும் நபர்கள் அல்லது நிறுவங்களுக்கு முந்தைய தண்டனையை விட இரட்டிப்பாக தண்டனை விதிக்கப்படும்.
ஆணையத்தால் விதிக்கப்படும் இந்த தண்டனைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil