New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/11/New-Project7.jpg)
Fire
சிதம்பரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பயணிகள் வெளியேறிய நிலையில் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Fire
சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்படத் தயாராக இருந்தது. பயணிகள் பேருந்தில் ஏறிய நிலையில், திடீரென புகை வெளியேறி பேருந்து தீ பற்றி எரியத் தொடங்கியது. மின்கசிவு காரணமாக டீசல் டேங்க் அருகே தீப்பிடித்து, மளமளவென எரியத் தொடங்கியது.
இதைக் கண்டு பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். பேருந்து முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த
சிதம்பரம் தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அங்கு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, பயணிகள் உயிர் தப்பினர்.
ஞாயிறு விடுமுறை முடிந்து பலரும் சொந்த ஊர்களிலிருந்து பணிக்கு திரும்ப பேருந்தில் ஏறினர். இந்நிலையில் பேருந்து தீ பற்றி எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தி: க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.