scorecardresearch

வருவாய் ஈர்ப்பு: நகர்ப் புறங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்க அரசு அனுமதி; பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

வருவாய் அதிகரிப்பு நடவடிக்கையாக நகர்ப் புறங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்க தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 2022-ன் கீழ் அரசு அனுமதி அளித்து அரசாணை பிறப்பித்துள்ளளது.

Hoardings in urban areas
Hoardings in urban areas

உள்ளாட்சி அமைப்புகளின் வருவாயை மேம்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 2022-ன் கீழ் நகர்ப்புறங்கள் மற்றும் பிற பகுதிகளில் விளம்பரப் பதாகைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு குடியிருப்பாளர்கள் மற்றும் நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் கூற்றுப்படி, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 2022-ன் கீழ், விளம்பரப் பதாகைகள் வைக்க அனுமதி வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது இன்னும் ஓரிரு நாட்களில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி சொந்த வருவாய் அதிகரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

மாநகராட்சி துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) விசு மகாஜன் தலைமையிலான அதிகாரிகள் குழு, உள்ளாட்சி அமைப்பின் நிதியை மேம்படுத்தும் திட்டத்தை கொண்டு வந்தது. விளம்பரப் பதாகைகள் வைக்க அனுமதி அளிப்பதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக வருவாய் கிடைக்கும் கிடைக்கும் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

குடியிருப்பாளர்கள் எதிர்ப்பு

பதாகைகளுக்கு அனுமதி அளிக்கும் நடவடிக்கைக்கு பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.நகர் பகுதி மக்கள் கூறுகையில், , நகருக்குள் அரசு பதாகைகள் வைக்க அனுமதி அளிக்க கூடாது. வருவாய் அதிகரிப்பதாக முதலில் அவர்கள் சொத்து வரி வசூலிக்கட்டும். சாலைகளில் விளம்பரப் பதாகைகள் ஆபத்தானவை. இதனால் கடந்த காலங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. பதாகைகள் பாதசாரிகள் மீது விழும் அபாயம் உள்ளது என்றும் கூறினர்.

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.ஜி. தேவசகாயம் கூறுகையில், நமது சாலைகள் ஏற்கனவே பல சிக்கல்களைக் கொண்டுள்ளன. மேலும் பதாகைகள் இவற்றை மோசமாக்கும். பலத்த காற்று மற்றும் மழை பெய்யும் போது பதாகைகள் சாலைகளில் விழும். இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு ஆபத்து உள்ளது என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Government decides to permit hoardings in urban areas residents and experts slam the move

Best of Express