அகவிலைப்படி உயர்வு, பண்டிகை முன்பணம் இரட்டிப்பு: அரசு ஊழியர்களுக்கு 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின்

இந்த அறிவிப்புகள் அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது

இந்த அறிவிப்புகள் அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது

author-image
WebDesk
New Update
MK Stalin in TN Assembly

MK Stalin

தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் ஒன்பது முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.  அதன் விவரம்;

அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு.

பண்டிகைக்கால முன்பணம் ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக இரட்டிப்பு.

Advertisment

அரசு அலுவலர்கள் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பலன் பெறும் நடைமுறை அக்டோபர் மாதத்திலேயே அமல் செய்யப்படும்.

அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்காலத்தில் தேவை அடிப்படையில் திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்வு.

பொங்கல் போனஸ் மற்றும் சி, டி பிரிவு ஓய்வூதியம் ரூ.1,000 ஆக அதிகரிப்பு.

ஓய்வூதியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.4,000-ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்வு.

Advertisment
Advertisements

மகப்பேறு விடுப்பு காலங்கள் பதவி உயர்வுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

பழைய ஓய்வூதியம் திட்டம் தொடர்பாக ஆராயும் குழு செப்டம்பர் மாதம் அறிக்கை சமர்ப்பிக்கும்.

அரசு ஊழியர்கள் குழந்தைகள் உயர்கல்விக்கு தொழில்நுட்பக் கல்லூரிக்கு ரூ. 1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்.

அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவிப்புகள், அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: