Advertisment

அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் வாங்கக் கூடாது; சுற்றறிக்கை அனுப்பக் கோரி வழக்கு

அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் வாங்கக் கூடாது என்ற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளை அமல்படுத்தும்படி, அனைத்து அரசுத் துறைகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழகத்தில் 'பத்திரிக்கையாளர்' என்ற போர்வையில் உலாவி வரும் மோசடி பேர்வழிகள் விரைவில் களையெடுக்கபட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல் ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்ததாகவும், வழக்கு விசாரணையின் போது, விசாரணை தொடர்பான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தர மறுத்தது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த பத்திரிகையாளர் சேகர்ராம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் நம்பக தம்மை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினார் இதனையடுத்து மனுதரார் அடையாள அட்டைகளை நீதிபதிகளிடம் வழங்கப்பட்டது. அப்போது, மனுதாரரின் அடையாள அட்டைகளுடன் சிலை கடத்தல் வழக்கில் சம்பந்தபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷாவின் அடையாள அட்டையும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், மனுதாரருக்கும் காதர் பாஷாக்கும் என்ன தொடர்பு என்றும் காதர் பாஷாவின் அடையாள அட்டை எப்படி மனுதாரரிடம் வந்

தமிழகத்தில் 'பத்திரிக்கையாளர்' என்ற போர்வையில் உலாவி வரும் மோசடி பேர்வழிகள் விரைவில் களையெடுக்கபட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன் மாணிக்கவேல் ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்ததாகவும், வழக்கு விசாரணையின் போது, விசாரணை தொடர்பான தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு தர மறுத்தது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட கோரி சென்னை கொரட்டூரை சேர்ந்த பத்திரிகையாளர் சேகர்ராம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் நம்பக தம்மை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினார் இதனையடுத்து மனுதரார் அடையாள அட்டைகளை நீதிபதிகளிடம் வழங்கப்பட்டது. அப்போது, மனுதாரரின் அடையாள அட்டைகளுடன் சிலை கடத்தல் வழக்கில் சம்பந்தபட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷாவின் அடையாள அட்டையும் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், மனுதாரருக்கும் காதர் பாஷாக்கும் என்ன தொடர்பு என்றும் காதர் பாஷாவின் அடையாள அட்டை எப்படி மனுதாரரிடம் வந்தது என கேள்வி எழுப்பினர். மேலும், பத்திரிக்கையாளர் என்ற பதவியை மோசடி பேர்வழிகள் பலர் கேடயமாக பயன்படுத்தி கொள்வதாக கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மஞ்ச பத்திரிக்கை நடத்துபவர்களும் தங்களை பத்திரிக்கையாளர் என கூறி கொள்வது வருத்தத்துகுறியது என தெரிவித்தனர். பத்திரிக்கைகளை பதிவு செய்ய குறைந்தபட்ச விற்பனை உள்ளிட்ட விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் பத்திரிக்கை துறையில் உள்ள கருப்பு ஆடுகளை அகற்ற வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். தற்போது பத்திரிக்கைகளில் செய்தி என்ற பெயரில் கருத்து திணிப்பு செய்வதாகவும், பத்திரிக்கை சங்கங்களை போலி நிருபர்கள் நிர்வகித்து வருவதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதுபோன்ற போலி பத்திரிக்கையாளர்களால் நேர்மையாக பணியாற்றும் உண்மை பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் அரசின் சலுகைகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை என்றும் தெரிவித்தனர்.. உண்மையான பத்திரிக்கையாளர்களுக்கு மட்டுமே அரசு அங்கீகார அடையாள அட்டை வழங்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், தற்போது அரசு அடையாள அட்டை பெற்றுள்ள பத்திரிக்கையாளர்கள் மீது குற்ற வழக்கு உள்ளதா? என காவல் துறையினர் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், தகவல் தொலை தொடர்பு துறை செயலாளர் மற்றும் பத்திரிக்கையாளர் மன்றம், சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தை தாமாக இந்த வழக்கில் இணைத்து உத்தரவிட்டனர்.. வழக்கு தொடர்ந்த மனுதாரரிடம், காதர் பாஷாவின் அடையாள எப்படி வந்தது என்பது குறித்தும், மனுதாரரின் பத்திரிக்கை அரசால் அங்கீகரிக்கப்பட்டதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.. தமிழகத்தில் எத்தனை பத்திரிக்கைகள் உள்ளது அதில் எத்தனை பேருக்கு அரசு அங்கிகார அட்டை வழங்கப்பட்டுள்ளது, எத்தனை பத்திரிக்கையாளர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்..

அரசு ஊழியர்கள் பரிசுப் பொருட்கள் வாங்கக் கூடாது என்ற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளை அமல்படுத்தும்படி, அனைத்து அரசுத் துறைகளுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

வேலூர் மாவட்டம், கீழ் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், புத்தாண்டை ஒட்டி, சார்பு பணியாளர்கள், தங்கள் உயரதிகாரிகளை சந்தித்து பரிசுப் பொருட்கள் வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வந்ததாகவும், சுதந்திரத்துக்குப் பிறகும் தற்போது வரை இந்த நடைமுறை தொடர்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயர் அதிகாரிகளிடம் இருந்து பிரதிபலனை எதிர்பார்த்தே இதுபோல பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசுப் பொருட்கள் வாங்குவோருக்கும், வழங்குபவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுத்து, இந்த சட்டவிரோத நடைமுறையை தடுக்க கோரி அரசுக்கு மனு அனுப்பியதாகவும், அதற்கு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அளித்த பதிலில், எந்த துறை என்பதை குறிப்பிட்டுத் தெரிவிக்கும்படி கூறியிருந்ததாக மனுவில் தெரிவித்துள்ளார்.

பரிசுப் பொருட்கள், வரதட்சணை பெறக்கூடாது என காவல் துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்ப டிஜிபி-க்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளதையும் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசு ஊழியர்கள், தாங்களோ, தங்கள் குடும்பத்தினர் மூலமோ பரிசுப் பொருட்களை பெறக் கூடாது என்ற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதியை கண்டிப்புடன் அமல்படுத்தும்படி, அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வு, இது குறித்து இரண்டு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், லஞ்ச ஒழிப்பு துறைக்கும் உத்தரவிட்டனர்.

Tamilnadu Madras High Court Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment