Advertisment

அரசு பள்ளியில் எமிஸ் பணிகளை மேற்கொள்ள கூடுதலாக 1000 பேர் நியமனம்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான எமிஸ் பணிகளை மேற்கொள்வதற்காக தற்போது 6300 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
minister

அரசு பள்ளியில் எமிஸ் பணிகள் குறித்த முக்கிய தகவல்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான எமிஸ் பணிகளை மேற்கொள்வதற்காக தற்போது 6300 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஆயிரம் பேர் நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் நியமிக்கப்பட்டு விட்டால் ஆசிரியர்களுக்கான எமிஸ் பணி முற்றிலும் இருக்காது என  கூறியுள்ளார்.

Advertisment

கோவையில் கவுண்டம்பாளையம் பகுதியிலுள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளி மார்ட்டின் குழுமம் சார்பில் தத்தெடுக்கப்பட்டு சுமார் 7 கோடி ரூபாய் செலவில் டிஜிட்டல் வகுப்பறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, புதிய கட்டிடங்கள்  கட்டப்பட்டுள்ளது.

413 மாணவர்கள் அங்கு படித்து வரும் நிலையில்  நவீன வசதிகளுடன் புதுப்பொலிவு பெற்ற பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழா இன்று நடைபெற்றது.கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்ற விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக  புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனைத்து தரப்பு மக்களும்  பாராட்டுகின்ற அளவுக்கு பள்ளி கல்வித்துறையில் இன்றைக்கு பல்வேறு முன்னெடுப்புகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார் என்றும் ஒரு படி நெல் விதைத்தால் அது 25 படியாக நமக்கு திருப்பி தருவது போல் இன்றைக்கு எந்த கல்வியை நாம் படிக்கின்றோமோ அந்த கல்வியின் பலனாக பலமடங்கு நாம் திருப்பி  பெறுகிதோம் என்றும்தெரிவித்தார். 

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்  கிட்டத்தட்ட 1 கோடியே 27 லட்சம் பிள்ளைகள் படிப்பதாகவும் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாட்டு முதலமைச்சர் நமக்கான நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி எனும் திட்டத்துக்காக தன்னுடைய சொந்த நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் கொடுத்து தொடங்கி வைத்ததாகவும் அது இன்று பல கோடிகளை தாண்டி செல்கிறது என்றும் கூறினார்.

பள்ளி கல்வித் துறை சார்பில் வகுப்பறை மேம்பாட்டுக்காக 455 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதாகவும் கோவை மாவட்டத்தில் மட்டும் 316 பள்ளிக்கூடங்களில் 30 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள்  நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

அரசு பள்ளி ஆசிரியர்களின் பணிச்சுமையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆசிரியர்களுக்கான கூடுதல் பணிகளை மேற்கொள்வதற்காக 79 பேர் ஏ.ஐ என்று சொல்லப்படக்கூடிய பணியிடத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

மேலும் தற்போது ஆசிரியர்கள் மேற்கொள்ளும் எமிஸ் பணிகளை மேற்கொள்வதற்காக தற்போது வரை 6300 பேர் நியமிக்கப்பட்டுள்ள சூழலில் மேலும் கூடுதலாக ஆயிரம் பேர் நியமனம் செய்ய இருப்பதாகவும் அந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும் பட்சத்தில் ஆசிரியர்களுக்கு எமிஸ் பணி என்பது முற்றிலும் இருக்காது என்றும் சுட்டி காட்டினார்.

செய்தி: பி.ரஹ்மான் - கோவை 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore Anbil Mahesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment